Joker Folie A Deux : ஜோக்கர் 2 ட்ரெய்லர் வெளியீடு

டிசி காமிக்ஸை தழுவிய ஜோக்கர் 2 திரைப்படத்தின் (Joker Folie A Deux) முதல் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிசி காமிக்ஸ் கதைகள் மூலம் பிரபலமான ஜோக்கர் கதாபாத்திரத்தின் அடிப்படையில், ஜோக்கர் திரைப்படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்திற்கு ஜோக்கர்: Joker Folie A Deux என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜோக்கர் :

சமூகம் தனக்கு இழைத்த அநியாயங்களை எல்லாம் அடங்கி ஒடுக்கி வந்த ஒரு சாது பயத்தில் எழும்போது என்ன நடக்கிறது என்பதே ஜோக்கரின் முதல் பாகத்தின் கதை ஆகும். இப்படம் த்ரில்லர் ஜானரில் உருவாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக ஜோக்கர் கதாபாத்திரம் என்று வரும்போது, ​​நோலன் டிரைலாஜியின் ஹீத் லெட்ஜர் நினைவுக்கு வருகிறார். ஆனால் அவரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு வாக்கின் பீனிக்ஸ் நடிப்பில் மிரட்டியதாக ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டினர். அதை உறுதிப்படுத்தும் வகையில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் ஜோக்கர் படம் ஆஸ்கார் விருதை வென்றது. அந்த வகையில் சிறந்த நடிகருக்கான விருதை வாக்கின் பீனிக்ஸ் பெற்றார். 17 வயதுடையவர்கள் மட்டுமே படத்தைப் பார்க்க முடியும் என்ற ‘ஆர்’ ரேட்டிங் மதிப்பீட்டைப் பெற்றிருந்தாலும், ஜோக்கர் உலகளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

Joker Folie A Deux - ஜோக்கர் 2 ட்ரெய்லர் :

முதல் அத்தியாயத்தின் முடிவில், ஜோக்கர்/ஆர்தர் ஃப்ளெக் டிவி தொகுப்பாளரைக் கொன்ற பிறகு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியுடன் நிற்பது காட்டப்படுகிறது. இருப்பினும், இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரில், ஜோக்கர்/ஆர்தர் ஃப்ளெக் (வாக்கின் பீனிக்ஸ்) அர்காம் அசைலம் என்ற சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹார்லி குவின் (லேடி காகா) அவரது மனநோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக நடித்துள்ளார். ட்ரெய்லரில் அவர்கள் இருவரும் பேசுவது, பழகுவது மற்றும் அவர்களின் காதல் மலர்வதைக் காட்டுகிறது. ஒரு கட்டத்தில் ஹார்லி க்வின் கதாபாத்திரம் லேடி ஜோக்கராக மாறுகிறது. இதற்கிடையில், வேறு சிலர் ஆர்தர் ஃப்ளெக்கின் ஜோக்கர் அடையாளத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனர். இதை எப்படி ஆர்தர் ஃப்ளெக் மற்றும் ஹார்லி க்வின் இருவரும் இணைந்து தடுத்து தங்கள் அடையாளத்தை மீண்டும் பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

தேவையில்லாத கிராபிக்ஸ் இல்லாமல், முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மிக இயல்பாகவும், நம்பும் படியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய டாட் பிலிப்ஸ் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். வாக்கின் பீனிக்ஸ் மீண்டும் ஒரு அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார். லேடி காகாவின் நடிப்பும் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், ஹார்லி குவின் கதாபாத்திரத்தில் ஏற்கனவே கவனம் ஈர்த்துள்ள மார்கோட் ராபி, அளவிற்கு இணையாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply