Joshua Imai Pol Kaakha Review : ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்பட விமர்சனம்

கௌதம் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் மற்றும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்வின் மனைவி ராஹேய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. வருண், ராஹேய், கிருஷ்ணா, மன்சூர் அலிகான், டிடி நீலகண்டன், யோகி பாபு, விசித்ரா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இசைமைப்பாளர் கார்த்திக் இப்படத்திற்கு இசைமைத்துள்ளார். ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் என்னென்ன நல்லா இருக்கிறது, என்னென்ன மிஸ்ஸிங் என்ற விரிவான விமர்சனத்தை (Joshua Imai Pol Kaakha Review) தற்போது காணலாம்.

ஜோஷ்வா இமை போல் காக்க கதை :

ஜோஷ்வா (வருண்) பணத்திற்காக கொலை செய்பவர். ஒரு கட்டத்தில் கொலை செய்வதை கைவிட்டு, ஆபத்தில் இருப்பவர்களை பாதுகாக்கும் காப்பாளராக மாறுகிறார். குந்தவி (ராஹேய்) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வழக்கறிஞராக இருக்கிறார். அங்குள்ள கடத்தல் கும்பலின் தலைவன் ஒருவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறாள். இதன் காரணமாக, கடத்தல் கும்பலின் தலைவன் குந்தவியைக் கொல்ல ஆட்களை அனுப்புகிறான். இந்நிலையில், சென்னை வந்த குந்தவிக்கு அவரது முன்னாள் காதலன் ஜோஷ்வா பாதுகாப்பு அளிக்கிறார். கடத்தல்காரர்களிடம் இருந்து குந்தவியை கண் இமை காப்பது போல் பாதுகாக்கிறார் ஜோஷ்வா. குந்தவியைக் கொல்ல வரும் அனைவரையும் ஒரு கை பார்க்கிறார். குந்தவி மீது கொண்ட காதலால், ஜோஷ்வா கொலை செய்யும் வேலையை விட்டுவிட்டு காவலாளியாக ஆனார். அது நிகழும்போது குந்தவியையே காக்கும் பொறுப்பு அவனுக்குக் கிடைக்கிறது மற்றும் அதை நன்றாக செய்கிறார். இந்த நிலையில், தனது தந்தைக்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதை குந்தவி கண்டுபிடித்துள்ளார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

Joshua Imai Pol Kaakha Review :

வழக்கம் போல் கௌதம் மேனன் படங்களில் வரும் காதலும் சண்டையும் தான் ஜோஷ்வா இமை போல் காக்க படத்திலும் இருக்கிறது. இப்படத்தில் அதிக ஆங்கில வசனங்கள் உள்ளன. நாயகன் நாயகியை காக்கும் எளிய கதையை படமாக்கியிருக்கிறார் கௌதம் மேனன். படத்தில் காதலும், அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வமும் இருக்கிறது. அதனால் படம் முழுக்க நம் கண்களை திரையை மட்டும் பார்க்க வைக்கிறது.

சில வரிகள் நம்மை சிரிக்க வைக்கின்றன. ஆக்‌ஷன் காட்சிகளில் ஹீரோ வருண் கை கொடுத்துள்ளார். காதல் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளில் கூடுதல் கவனம் தேவை. ராஹேயின் நடிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரசிகர்களின் முழு கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கிருஷ்ணா. ஆக்‌ஷன் காட்சிகளும் இசையும் தான் ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்படத்தை (Joshua Imai Pol Kaakha Review) பாதுகாக்கிறது.

Latest Slideshows

Leave a Reply