Jp Nadda Releases Special Stamp : தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் - சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது

Jp Nadda Releases Special Stamp :

இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையில் குடியேறி 200 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் மத்திய அரசு ஆனது சிறப்பு தபால் தலை (Jp Nadda Releases Special Stamp) வெளியிட்டுள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இந்த சிறப்பு தபால் தலையை வெளியிட்டார் :

பாஜக தேசிய தலைவர் நட்டா சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட அதனை இலங்கை அரசின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Jp Nadda Releases Special Stamp) பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சி ஆனது டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்  மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். இலங்கையில் விவசாயம் சார்ந்த தொழில்கள், காபி மற்றும் ரப்பர் தோட்ட வேலைகளுக்காக தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மக்களை இலங்கைக்கு இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயே அரசு ஆனது வலுக்கட்டாயமாக அனுப்பியது. இலங்கை மலையகத் தமிழர்கள் என அவர்கள் அழைக்கப்பட்டனர்.

இலங்கை மற்றும் இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இலங்கை மலையகத் தமிழர்கள் ஏராளமான வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொண்டனர். இலங்கையும் இந்தியாவும் சுதந்திரம் பெற்ற பின்பு குடியுரிமை சிக்கல் ஆனது எழுந்தது. இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளும் உடன்படிக்கை செய்து கொண்டன. அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கைவாழ் மலையகத் தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை ஆனது வழங்கப்பட்டது. அதே நேரத்தில் இந்தியா பல்லாயிரக்கணக்கானோரை திரும்ப அழைத்துக்கொண்டது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையக தமிழர்கள் புலம்பெயர்ந்த 200-வது ஆண்டு நிறைவின் நினைவு ஆனது தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்ததனை நினைவு கூரும் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆளுநர் தொண்டமான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜே.பி.நட்டா உரை :

இந்திய நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கையில் 1823 ஆம் ஆண்டில் குடியேறி 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவது எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. இந்த தபால் தலையை (Jp Nadda Releases Special Stamp) வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் இந்திய இலங்கை உறவு ஆனது மேம்படும் எனத் தெரிவித்தார்.

Latest Slideshows

Leave a Reply