Jujube Fruits Benefits: புற்றுநோய் கிருமிகளை அழிக்க கூடிய இலந்தைப் பழம்
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம் அதில் ஒன்றுதான் உணவு உண்ணும் முறை. நாம் உண்ணும் உணவானது ருசியாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஆரோக்கியத்திற்கு தேவையான காய்கறிகளை சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் பழங்கள் சாப்பிடுவது. ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு நன்மைகள் அடங்கியுள்ளது.
பழங்களை அதிகப்படியான விலைகொடுத்துதான் வாங்க முடிகிறது. அதில் சில பழங்கள் மட்டும் எளிமையாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் பழங்களில் எண்ணற்ற பயன்களும், மருத்துவ குணங்களும் அதிகம் நிறைந்துள்ளது. இதன் நன்மைகள் தெரியாததால் நாம் அந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கிறோம். அந்த வரிசையில் நாம் பார்க்க கூடிய பழம்தான் இலந்தைப் பழம் (Jujube Fruits). எளிமையாக கிடைக்கும் பழங்களில் ஒன்று இலந்தைப் பழம் (Jujube Fruits). ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த பழத்தை மறந்து வருகிறோம் என்றே சொல்லலாம்.
இலந்தைப்பழம்(Jujube Fruits) உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியைத் தருகிறது. இதன் சுவை இனிப்பு மற்றும் கொஞ்சம் புளிப்பு கலந்தது போல் இருக்கும். இந்த பழம் இரண்டு வகைகளில் உள்ளது. ஒன்று காட்டு இலந்தை மற்றொன்று நாட்டு இலந்தை. இரண்டிலும் மருத்துவ பயன்கள் நிறைந்து இருக்கிறது. அது மட்டுமின்றி இம்மரத்தின் பட்டை, துளிர் இலை, வேர் போன்றவைகளிலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது.
இலந்தைப் பழத்தின் சத்துக்கள் (Jujube Fruits Nutrients)
இயல்பாகவே பழங்கள் சுவையாக இருப்பது மட்டும் இன்றி அதிக சத்துக்கள் நிறைந்ததாகும் இருக்கிறது. அந்த வரிசையில் அதிக சத்துக்கள் நிறைந்த பழம்தான் இலந்தைப் பழம் (Jujube Fruits). இந்த பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி3, பி6, மாவுச்சத்துக்கள், கால்சியம், தாமிரம், தாது உப்புகள், இரும்புச்சத்து, மாங்கனீஸ் மற்றும் கார்போஹைட்ரேட், புரதம் போன்ற அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.
இலந்தைப் பழத்தின் (Jujube Fruits) மருத்துவ குணங்கள்
இலந்தைப் பழம் (Jujube Fruits) பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் அதில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது. இந்த பழத்திற்கு ஜுஜுபி என்ற பெயரும் உண்டு. ஈரானின் மருத்துவ ஆராய்ச்சியில் இந்த பழத்தின் சாறை ஆராய்ச்சி செய்யும்போது அதில் உள்ள அப்பம்டோசஸ் (Automatic send) ஆல் புற்று நோய்க் கிருமிகள் தானாகவே இறந்து விடுகிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த பழத்தை உட்கொண்டால் இரத்த புற்றுநோய் வராது என்றும் அறிந்துள்ளனர். அது மட்டுமின்றி சீனாவில் (Ticket for sleep) என்று சொல்லப்படும். தூக்கத்திற்காக டிக்கெட் வாங்கவேண்டும் என்றால் அதற்கு முன் (Jujubee tea) என்று சொல்லப்படும். இந்த பழத்தின் டீயை கொடுகின்றனர். தூக்கத்திற்கான நல்ல மருந்தாக இந்த பழத்தின் சாறு பயன்படுகிறது. மேலும் இந்த பழத்தை அதிகம் உட்கொண்டால் மன அழுத்தம் இன்றி நேர்மறையான சிந்தனைகள் ஏற்படும் என்றும்
இரவில் நல்ல தூக்கம் வரும் என்றும், உடல் சோர்வு இல்லாமல் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. கால்சியம் அதிகம் இருப்பதால் இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலுவை தருகிறது. உடலில் உள்ள பித்தத்தை சம நிலை படுத்துகிறது. பயணத்தின் போது ஏற்படும் குமட்டல் மற்றும் தலைச்சுற்றலை சரிசெய்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப் போக்கை சரிசெய்கிறது. உடல் வலியை சரியாக்குகிறது. செரிமான சக்தியை அதிகரிக்கிறது. இத்தனைச் சிறந்த மருத்துவ குணங்கள் இலந்தைப் பழத்தில் நிறைந்துள்ளது.