Jujubee Song : இதெல்லாம் எனக்கு ஜூஜூபி, வெளியானது ஜெயிலர் படத்தின் 3 வது பாடல்...

Jujubee Song :

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகை தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, விநாயக், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து ‘காவாலா’ பாடல் வெளியாகி அனைத்து இடங்களிலும் ஹிட் அடித்தது. இப்பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி, இளசுகள் முதல் பெரியவர்கள் வரை நடனமாடி வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதையடுத்து, இரண்டாவது பாடலான ‘Hukum’ பாடல் வெளியாகி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூப்பர் ஸ்டார் டைட்டில் சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “பெயர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு, குட்டிச்செவத்த எட்டி பாத்தா, உசுர கொடுக்க கொடி பேரு” என்ற Hukum பாடலை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்தனர்.

இந்நிலையில் ஜெயிலரின் மூன்றாவது சிங்கிள் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. களவாணி கண்ணைய்யா என்று தொடங்கும் ஜூஜூபி பாடலை பாடகி ‘தீ’ பாடியுள்ளார். இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுதி அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலைக் கேட்கும் போது தலைவரு சும்மா தெறிக்கவிட்டு இருக்காரு என சொல்லும் அளவுக்கு இப்பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடலைக் கேட்கும் போது, ​​’Hukum’ பாடலுக்கு மேலே இருக்கே என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply