Junior Hockey World Cup : கனடாவை வீழ்த்திய இந்திய அணி | கால் இறுதிக்கு தகுதி

Junior Hockey World Cup :

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி (Junior Hockey World Cup) தொடரில் இந்திய அணி 10 கோல்கள் அடித்து கனடா அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. சி பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்தாலும், தென் கொரியாவை வீழ்த்தியது இந்திய அணி. பின்னர் குழுநிலையின் கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவை எதிர்கொண்டது.

Junior Hockey World Cup : இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி சி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறும். கனடாவுக்கு எதிராக இந்திய வீரர்கள் 10 கோல்கள் அடித்தனர். கனடா ஒரு கோல் மட்டுமே அடித்தது.  இந்தியா சார்பில் ஆதித்யா அர்ஜுன் லலாகே 2 கோல்கள் (8′, 43′), ரோஹித் 2 கோல்கள் (12′, 55′), அமந்தீப் லக்ரா 2 கோல்கள் (23′, 51′), விஷ்ணுகாந்த் 1 கோல் (42′), ராஜிந்தர் 1 கோல் ( 42′), குஷ்வாஹா சவுரப் ஆனந்த் ஒரு கோலும் (51′), உத்தம் சிங் ஒரு கோலும் (58′) அடித்தனர். கனடாவின் ஜூட் நிக்கல்சன் ஒரு கோல் (20′) அடித்தார். செவ்வாய்க்கிழமை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் (Junior Hockey World Cup) இந்தியா குரூப் டி வெற்றியாளரான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. நாக்-அவுட் போட்டி என்பதால், அந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

Latest Slideshows

Leave a Reply