Jupiter Satellite : வியாழனின் துணைக்கோளான யூரோப்பாவில் கார்பன் கண்டுபிடிப்பு

Jupiter Satellite :

  • பூமியைத் தவிர மற்ற கிரகங்களிலும் அவற்றின் துணைக்கோள்களிலும் உயிர்கள் இருக்கின்றனவா என்று அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் தீவிரமான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்காவின் ‘NASA’ விஞ்ஞானிகள் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கியின் உதவியோடு வியாழனின் துணைக்கோளான (Jupiter Satellite) யூரோப்பாவில் கார்பன் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இங்கு காணப்படும் கார்பன் யூரோப்பாவின் கடலுக்கு அடியிலிருந்து மேலே வந்தது தான் என்றும் வெளியில் இருந்து வந்ததல்ல. அதாவது இந்த கார்பன் விண்கற்களில் இருந்து வந்ததல்ல என்று ‘NASA’ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
  • இந்தத் யூரோப்பா துணைக்கோள் (Jupiter Satellite) முழுதும் பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. அவற்றுக்குக் கீழே கடல்கள் இருப்பதை ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. இந்தப் பனிப்பாறைகள் சற்றே உடைந்து இருக்கக்கூடிய இடம் ‘தாரா ரீஜியோ’ என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஏராளமான கரியமில வாயு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தபகுதியில் உப்பு இருப்பதை ஏற்கனவே ‘ஹப்பிள்’ தொலைநோக்கி கண்டுபிடித்து இருக்கிறது.
  • கார்பன் என்பது உயிர்கள் தோன்றுவதற்கு மிகவும் அவசியமான ஒரு தனிமமாகும் . இதனால் கார்பன் அதிகமாக இருக்கும் இந்தத் துணைக்கோளில் (Jupiter Satellite) உயிரினங்கள் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்பது அமெரிக்கா விஞ்ஞானிகள் கருத்து. அமெரிக்காவின் ‘நாசா’ அடுத்த 2024ஆம் ஆண்டு அக்டோபரில் யூரோப்பாவிற்குத் விண்கலம் ஒன்றை அனுப்ப உள்ளது. இது யூரோபா பற்றிய பல விதமான புதிய தகவல்களை கண்டுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply