Jyothika Won The Best Actress Award : தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றார் நடிகை ஜோதிகா

Jyothika Won The Best Actress Award :

தமிழ் சினிமா 2015க்கான தமிழக அரசின் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. இதில் ஜோதிகா சிறந்த நடிகைக்கான (Jyothika Won The Best Actress Award) விருதைப் பெற்றார். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் திரையுலக பிரபலங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, 2015 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் மார்ச் 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு வழங்கப்படும் என சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இதன்படி தற்போது சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் திரை பிரபலங்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதை ’36 வயதினிலே’ படத்திற்காக (Jyothika Won The Best Actress Award) பெற்றார். இயக்குனர் ரோஷன் அண்ட்ரிவ்ஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்திருந்தார்.

கடந்த 2015 இல் வெளியான இந்த படம் ஜோதிகாவின் ரீ என்ட்ரி படமாகும். ஏற்கனவே இந்தப் படத்துக்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் சார் விருது, உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்ற ஜோதிகா, தற்போது தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். வீட்டில் இருக்கும் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை ஊக்கப்படுத்தும் விதமாக இப்படம் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக ரகுமான் நடித்திருந்தார். மேலும் அபிராமி, நாசர், டெல்லி கணேஷ், கலைராணி, போஸ் வெங்கட், இளசாசு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply