Jyotika Returns To Bollywood: 25 ஆண்டுகளுக்கு பிறகு பாலிவுட்டில் களமிறங்கும் ஜோதிகா

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே, செக்க சிவந்த வானம், மகளிர் மட்டும், பொன்மகள் வந்தாள், ஜாக்பாட், உடன்பிறப்பே மற்றும் ராட்சசி போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. ஜோதிகா, அதன்பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகை ஜோதிகா தற்போது இந்தியில் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதையடுத்து தற்போது பாலிவுட் படத்தில் கமிட்டாகியுள்ளார். அதாவது மாதவன் மற்றும் அஜய் தேவகன் முக்கிய வேடத்தில் ஒரு புதிய படத்தில் ஜோதிகா இணைந்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படம் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற தலைப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த மார்ச் 30 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜய் தேவ்கன் சூப்பர் 30, குயின், குட் பை ஆகிய படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

ஜூன் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், மும்பை மற்றும் முசோரி உள்ளிட்ட பகுதிகளில் நடக்க இருக்கிறது. அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகை ஜோதிகா கடைசியாக 1998 ஆம் ஆண்டு வெளியான ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜய் தேவ்கன் மாதவன் நடிக்கும் இப்படத்தின் மூலம் 25 வருடங்களுக்கு பிறகு ஹிந்தி திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply