Kadaisi Ulaga Por Release Date : 'கடைசி உலக போர்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

ஹிப் ஹாப் ஆதி நடித்து வரும் கடைசி உலக போர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி (Kadaisi Ulaga Por Release Date) வெளியாகியுள்ளது.

கடைசி உலக போர் :

பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, தனி ஒருவன், ஆம்பள, வணக்கம் சென்னை, அரண்மனை என பல படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் நடிப்பில் ஆர்வம் உள்ள நிலையில் மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு நட்பே துணை, வீரன் போன்ற படங்களிலும் நடித்தார். ஹிப் ஹாப் ஆதியின் கடைசிப் படமான பிடி சார் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஹிப் ஹாப் ஆதி அடுத்து என்ன படத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த வகையில் ஆதி கடைசி உலக போர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் போரைச் சம்மந்தமான கதைக்களத்தை சுற்றி வருகிறது. ஹிப் ஹாப் ஆதி ‘ஹிப் ஹாப் தமிழா’ எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் இந்தப் படத்தைத் தானே தயாரித்து இயக்குவது மட்டுமின்றி, படத்திற்கும் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் பரவி வருகிறது.

Kadaisi Ulaga Por Release Date :

இந்தப் படத்திற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்ய பிரதீப் E ராகவ் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், படத்தின் கிளிப் வீடியோ இன்று (ஜூலை 19) வெளியாகும் என ஹிப் ஹாப் ஆதி கூறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி கடைசி உலக போர் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply