Kadal Konda Thennadu Book : கண்ணதாசனின் “கடல்கொண்ட தென்னாடு”

பூமியின் வரைபடத்திலிரிந்து மறைந்து போன ஒரு நாடு குமரிக்கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு ஆகும். கடல்கொண்ட தென்னாடு ஆனது பண்டைய பழந்தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்து கடலுக்குள் அமிழ்ந்து போனதாகக் கருதப்படும் ஒரு நிலப்பகுதியைக் குறிக்கின்றது. 49 நாடுகள் இப்பகுதியில் இருந்ததாகவும், இந்த 49 நாடுகளும் பிற்காலத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடலினுள் அமிழ்ந்தாகவும் தமிழ் இலக்கியங்களில் இருந்து அறியப்படுகிறது. இந்த கடல் கொண்ட தென்னாடு (Kadal Konda Thennadu Book) ஆனது கடலில் மூழ்கிவிட்டதாக கருதப்படும் கண்டத்தை பற்றி எழுதப்பட்ட ஒரு தொன்ம வரலாற்று ஆராய்ச்சி நூல் மற்றும் சரித்திரக் கதை ஆகும்.

தமிழிலக்கியங்களில் கடலில் மூழ்கிய இந்த கண்டத்தை தான் லெமூரியா கண்டம் என்று குறிப்பிடப்படுகிறது என 1898-ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்துமாக்கடலில் மூழ்கி மறைந்த இந்த கண்டமானது குமரிக்கண்டம், லெமுரியாக்கண்டம் மற்றும்  கோண்டுவானா என்னும் முப்பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. இத்தென்பகுதியில் குமரிக்கோடு, பன்மலையடுக்கம், பஃறுளியாறு மற்றும் 52 நாடுகள் இருந்துள்ளன. இந்த கண்டத்தைப் பற்றிய ஆய்வு பல்துறை வல்லுநர்களால் நடத்தப்பட்டுள்ளது.

நம் தொன்மையை முழுமையாய் வெளிபடுத்த இன்னும் முறைப்படுத்தப்பட்ட கடல் ஆய்வுகள் முழமையாக தொடங்கப்படவில்லை. மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பழம் ஆய்வுகள் மற்றும் நிலத்திணை ஆய்வுகள் இன்று வரை யாரும் தொடாமல் உள்ளது. தமிழ் மக்கள் ஒவ்வொரு நிலத்திணையையும் எவ்வாறு பயன்படுத்தி வாழ்முறைக்குத் தகுந்ததாக உருவாக்கியுள்ளார்கள் என்பதைக் கண்டு உலகமே வியக்கிறது.

கட்டுக்கதைகள் இல்லை என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆய்வுகள் :

இலக்கியத்தில் உள்ள கடல்கோள்கள் மற்றும் கண்டம் மூழ்குதல் என்ற செய்திகளெல்லாம் சிறிது காலத்திற்கு முன்பு வரை அவற்றில் உண்மை இல்லையென்றும் பழம்பெருமை பேசுவதாகும் என்றே புறந்தள்ளப்பட்டிருந்தது மற்றும் மிகைப்படுத்தப்பட்டதாகவே கொள்ளப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையால் இவை மீண்டும் புத்தாக்கம் பெற்றன. உலகின் 8,50,000 கி.மீ. கடற்கரையில் 3,50,000 கி.மீ. கடற்கரையில்  பெரும்பாலும் தமிழர்களின் பதிவுகள் இருப்பது தெரியவருகிறது. ஒரியா, பர்மா, கடாரம், அந்தமான் போன்ற கரையோர ஊர்களில் ஊர்ப்பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக வழங்குகின்றன. 959-1964 இல் நடந்த இந்துமாக்கடல் கடலாய்வின் வழி கண்டறிந்த மூழ்கிய அல்லது மேல்தெரிகின்ற மலைத்தொடர்களும் தொடர்ச்சியான தீவுகளும் ஒரு நிலப்பரப்பு விட்டு விட்டு தீவுகளாய் இருந்திருப்பதற்கான சான்றுகளாக இருப்பதால் கடலில் ஒரு நிலப்பரப்பு மூழ்கியிருக்கலாம் என நம்பப்பட்டது.

நிலப்பரப்புத் தன்மைகளின் ஒற்றுமை, இவற்றில் வாழும் உயிரினங்கள், விலங்குகள் மற்றும் படர்ந்திருக்கும் நிலத்திணைகள் ஆகியவற்றின் ஒற்றுமைகளைக் காட்டி இப்பகுதிகளை இணைத்த ஒரு பெருநிலப்பரப்பு இருந்திருக்கவேண்டும் என்றும் அது பின்பு மூழ்கியிருக்க வேண்டும் என்ற கருத்து உருவானது. குமரிக்கடலில் பெரும்பகுதி இடிபாடுகள் நிறைந்த தரைப்பகுதிகளாக இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. அதேபோல் தீவுகளும் ஆழங்குறைந்த திட்டுகளும் இருப்பது ஆய்வில் தெரியவந்தது.

இலக்கத்தீவுப் பகுதியிலிருந்து தொடர்ச்சியான தீவுகள் ஏராளமாக இருப்பது தெரியவருகிறது இன்றைக்கும் உலகம் சுற்றிய தமிழக கடலோடி மீனவ மக்கள் கடற்கரைகளில் வாழ்ந்து வருகிறார்கள் மற்றும் கடலோடி மீனவ மக்களில் பலர் உலக எல்லைக் கடவு வைத்திருக்கிறார்கள். வெறும் பாய்மரக்கப்பலில் அந்தமான், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, சீனா என்று வலம் வருவதை தமிழக கடலோடி மீனவ மக்கள் பெரியதாகக் கருதுவதேயில்லை. மிக எளிமையாக அதன் நுட்பங்களைத் தெரிந்து வைத்துள்ளனர்.

இன்றும் உலக கடலோர ஊர்களில் தமிழரின் மரபு விளையாட்டுகளான சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு, தாயம், பல்லாங்குழி போன்றவை நிலவுகின்றன. தமிழகத்தில் தமிழ் மொழியின் தாக்கம் அதிகமாகவும், வடக்கே செல்ல செல்ல தமிழ் மொழியின் தாக்கம் அப்பகுதி மொழிகளில் குறைந்திருப்பதை கொண்டு தமிழ் மக்கள் குமரிக்கண்டத்திலிருந்து வடக்கு நோக்கி குடிபெயர்ந்ததை அறிய முடிகிறது. தமிழர் கடல் சார் பயணத்தில் மேற்கு திசையை காட்ட லெமூர் என்கின்ற தேவாங்கை பயன்படுத்தினர் என்ற சொல் லெமூர் என்ற தேவாங்கு பொருளில் லெமுரிய கண்டம் என்ற பெயர் வந்தது என்று நம்மை சிந்திக்க வைக்கிறேது. பூகோள அமைப்புகளை, சின்னஞ்சிறு விஷயங்களை நாவல் நன்றாக சொல்லியுள்ளது.

Kadal Konda Thennadu Book - ஓர் குறிப்பு :

பூமி வரைபடத்திலிரிந்து மறைந்து போன ஒரு நாடும், நாகரீகமும், அவர்களின் அரசியல், மற்றும் பழக்க வழக்கத்தை வைத்து கடல்கொண்ட தென்னாடு நூல் (Kadal Konda Thennadu Book) ஆனது எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிலர் தமிழனின் வரலாற்றை மறைக்க முயன்று லெமூரியாக் கதைகள் கட்டுக்கதைகள் என்று வாதிட்டு வந்ததுதான் கண்ணதாசன் இக்கதையை எழுத தேர்வு செய்ததற்கு காரணம் ஆகும். கட்டுக்கதைகள் இல்லை என்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் கண்ணதாசன் அவர்கள் கடல்கோள், ஏற்பனை, ஏழ்தெங்கம், பன்மலைய்டுக்கம், பஃறுளியாறு, குமரியாறு மற்றும் நிலந்திரு திருவிற்பாண்டியன் போன்ற மிகச்சில உறுதியான தகவல்களோடு சற்று கற்பனையைச் கூட்டி இக்கதையை  (Kadal Konda Thennadu Book) எழுதியுள்ளார்.

இன்றைக்கு சுமார் 52 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குமரிக்கண்டத்தில் வாழ்ந்த பச்சைத் தமிழரின் பண்பாட்டு வாழ்க்கையைக் இந்த கடல் கொண்ட தென்னாடு என்ற நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. தென்மதுரையைத் தலைநகராகக் கொண்டு நிலந்திரு திருவிற்பாண்டியன்  இத்தென்பகுதியில் இருந்த குமரிக்கோடு, பன்மலையடுக்கம், பஃறுளியாறு மற்றும் 52 நாடுகளை ஆண்டுள்ளான். திருவிற்பாண்டியனின் மகன் வில்லாளனும் மற்றும் அறுவா நாட்டு இளவரசி பூம்பாவையும் அந்நாளைய மணமுறைப்படி மணம் புரிகின்றனர். அதனால் இளவரசன் வில்லாளனைக் காதலித்து வந்த நீலவிழி பாண்டிய நாட்டுக்கு வணிகம் செய்ய வந்த எபிரேய அரசன் செமோசியை மணக்கிறாள்.

ஆனால் நீலவிழி மனதில் வில்லாளனே இருக்கிறான். நீலவிழி மணிச்சரம் தீவில் ஆவியாக வாழ்ந்து வந்த அம்ருதா என்ற ஒரு இளம்பெண் ஆவியின் உதவியுடன் பூம்பாவையையும் வில்லாளனையும் பழி வாங்க முற்படுகிறாள். நீலவிழியின்  வஞ்சகத்தைப் புரிந்து கொண்ட செமோசி அவளைப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பி விடுகிறான். பாண்டிய நாட்டில் நீலவிழி மரண தண்டனை அடைகிறாள். இதனால் கடல் கோள் வருகிறது. அதன் காரணமாக மன்னனும் மக்களும் தென்மதுரையை விட்டு வெளியேறுகின்றனர். அதைத் தொடர்ந்து கடலுள் பஃறுளியாறும் பன்மலை அடுக்கமும் மூழ்கின. இளவரசன் வில்லாளன் மற்றும் நீலவிழி இருவர் ஆவியும் கடலின் மீது உலவுகின்றன. கடல்கொண்ட தென்னாட்டின் கதைப்பின்னல் இதுதான் கண்ணதாசன்  இக்கதையின் ஊடாக   குமரிக்கண்டத்தின் வரலாற்றையும் பிணைத்துக் காட்டுகிறார். இந்த குறிப்பை கண்ணதாசனின் “எனது சுயசரிதம்” என்ற நூலில் நாம் காணலாம்.

Latest Slideshows

Leave a Reply