Kadhalikka Neramillai First Look : ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Kadhalikka Neramillai First Look :

கோலிவுட்டின் சாக்லேட் ஹீரோவாக கலக்கி வருகிறார் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஜெயம் ரவி தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்தவர் ஜெயம் ரவி. இது அவரது கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அடுத்து வந்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர்ஸ், சைரன் ஆகிய படங்களில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வருகிறார். அதேபோல் கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்திலும் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னொரு பக்கம் ஐசரி கணேஷ் தயாரிக்கும் ஜெனி படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் தனி ஒருவன் 2 ஆம் பாகமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Kadhalikka Neramillai First Look) வெளியாகியுள்ளது.

Kadhalikka Neramillai First Look : அதன்படி கிருத்திகா உதயநிதி இயக்கும், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு ‘காதலிக்க நேரமில்லை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவியும் ஏ.ஆர்.ரகுமானுடன் பொன்னியின் செல்வன், தக் லைஃப், ஜீனி வரிசையில் காதலிக்க நேரமில்லை படத்திலும் இணைகிறார். மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷுன் பெஸ்டியாக நடித்து ரசிகர்களை ஏங்க வைத்தார். இப்போது ஜெயம் ரவியை ரொமான்ஸ் செய்ய தயாராகிவிட்டார். அதன்படி தற்போது காதலிக்க நேரமில்லை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Kadhalikka Neramillai First Look) போஸ்டரில் ஜெயம் ரவியும் நித்யா மேனனும் செம்ம ரொமண்ஸ் போஸ் கொடுத்துள்ளனர். இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், ஜான் கொக்கேன் ஆகியோரும் நடிக்கின்றனர். காதலிக்க நேரமில்லை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Kadhalikka Neramillai First Look) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வணக்கம் சென்னை, காளி படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி இந்த முறை மெகா டீம் மூலம் களமிறங்கியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply