Kaduvetti Movie Review : காடுவெட்டி திரைப்படத்தின் திரைவிமர்சனம்

தயாரிப்பாளராக வலம் வந்த ஆர்.கே.சுரேஷின் காடுவெட்டி திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. படம் தற்போது வெளியான நிலையில், முதல் காட்சியை காண திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். சோலை ஆறுமுகம் இயக்கிய காடுவெட்டி திரைப்படத்தை பார்த்த பொதுமக்களின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் பா.ம.க.வில் முக்கியப் பிரமுகராக இருந்த காடுவெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் காடுவெட்டி ஆகும். இந்த படத்திற்கு சென்சார் போர்டு பல கட்டுப்பாடுகளை விதித்தது. காடுவெட்டி என்ற டைட்டிலேயே பயன்படுத்தக் கூடாது என சென்சார் போர்டு தடை விதித்திருந்த நிலையில், அதன்பிறகு விளக்கம் கொடுத்து டைட்டிலை வாங்கினார்கள்.

Kaduvetti Movie Review : காடுவெட்டி திரைவிமர்சனம்

காடுவெட்டி ஜாதி படம் இல்லை என்று ஆர்.கே.சுரேஷ் முன்பு கூறியிருந்தார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது, ​​படத்தைப் பார்த்த ரசிகர்கள், இது காடுவெட்டி குருவின் வாழ்க்கையைச் சார்ந்த கதை என்று சொல்லிவிட முடியாது, பொதுவாக இந்த சமூகத்தில் நடப்பதை படம் எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் அவங்கதான் பார்க்கணும் இவங்கதான் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல, அனைவருக்குமான படம். ரசிகர்கள் இந்த மாதிரியான படங்கள் வருஷத்துக்கு மூன்று வரவேண்டும் என்றனர்.

 இந்தப் படம் முக்கியமாக கல்லூரி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட படம். இந்த படம் கல்லூரி மாணவர்களை சிந்திக்க வைக்கும். அதேபோல படம் பார்க்கும் போது சாதிப் படமாக பார்க்காமல், ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கும் வரலாற்றை வைத்து சினிமாவாக பார்க்க வேண்டும். சாதித் தலைவர்களை நம்பி மாணவர்கள் பயணம் செய்யக்கூடாது என்பதை இந்தப் படம் சொல்கிறது என்றார். படத்தில் பல இடங்களில் பாடல் தேவையற்றது என்று கருத்து தெரிவித்துள்ளனர். காதல் பண்ணா பாட்டு, சமைச்சா பாட்டு, அடிச்சா பாட்டு, என எதற்கு எடுத்தாலும் பாட்டு வருகிறது. ஆனாலும் பாடல்களும் வரிகளும் நன்றாக அமைந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply