Kaduvetti Movie's Box Office Collection : காடுவெட்டி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

பல பரபரப்புகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் வெளியாகி நிதானமாக திரையரங்குகளில் வசூல் செய்து வருகிறது காடுவெட்டி (Kaduvetti Movie’s Box Office Collection) திரைப்படம். ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘காடுவெட்டி’ படத்தின் முதல் மூன்று நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 15ஆம் தேதி வெளியாகி ஜாதிப் படக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘காடுவெட்டி நடுநாட்டுக்கதை’. மறைந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆருத்ரா ஊழல் வழக்கில் தேடப்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள படம் ரிலீசுக்கு முன்பே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பாலாவால் ஆர்.கே. சுரேஷ் தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆர்.கே.சுரேஷ் நடித்த காடுவெட்டி படத்தை சோலை ஆறுமுகம் இயக்க, ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லைகளில் ஈடுபடும் நபரை அரிவாள் கொடுத்து, பள்ளி மாணவியையே வெட்ட சொல்லும்படியான காட்சி இடம்பெற்ற நிலையில், இந்த காட்சி இணையத்தில் ஏற்கனவே பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

காடுவெட்டி பாக்ஸ் ஆபீஸ் வசூல் (Kaduvetti Movie's Box Office Collection)

இத்தனை பரபரப்புகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் மத்தியில் வெளியாகியுள்ள காடுவெட்டி படம் வசூலில் (Kaduvetti Movie’s Box Office Collection) மெல்ல முன்னேறி வருகிறது. காடுவெட்டி முதல் நாளில் மட்டும் ரூ 15 லட்சங்களை வசூலித்ததாக இந்தியப் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் தரவைப் பகிரும் தளமான Sacnilk  தெரிவித்துள்ளது. இரண்டாவது நாளில் காடுவெட்டி ரூ.9 லட்சம் வசூல் செய்துள்ளது. இரண்டாம் நாள் சற்று சரிந்தாலும், மூன்றாவது நாளில் படத்தின் வசூல் மீண்டும் அதிகரித்தது. அதன்படி இப்படம் மூன்றாவது நாளில் ரூ. 12 லட்சம் காடுவெட்டி திரைப்படம் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 லட்சம் வசூலித்துள்ளது.

Latest Slideshows

This Post Has 2 Comments

  1. Ramya

    Thanks so much for the blog post.

    1. Thanigaimalai

      Thank you so much for sharing this wonderful post with us.

Leave a Reply