Kaithi 2 Update : கைதி 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் லோகேஷ் கனகராஜ் அப்டேட்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் (Kaithi 2 Update) புகைப்படத்தை பகிர்ந்து டில்லி மீண்டும் விரைவில் வருவான் என்று பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், கைதி என்ற அதிரடி படத்தை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார். மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

விரைவில் கைதி 2 (Kaithi 2 Update)

அக்டோபர் 25, 2019 அன்று வெளியான கைதி திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்தன. அதைத் தொடர்ந்து நேற்று லோகேஷ் கனகராஜ் இந்தப் பதிவை வெளியிட்டார். கைதி படத்தின் இறுதியில் (Kaithi 2 Update) இரண்டாம் பாகத்தைக் காட்டியிருப்பார்கள். அதேபோல் விக்ரம் படத்தின் இறுதியில் டில்லி என்ற கதாபாத்திரத்தை குறிப்பிட்டு கார்த்தியின் குரல் ஒலிக்கும். லோகேஷ் கனகராஜும் ஏற்கனவே கைதி 2ம் பாகம் படத்தை செய்யப் போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் விரைவில் மீண்டும் டில்லி வருவார் என லோகேஷ் கனகராஜ் பதிவிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ஒரே இரவில் நடப்பது போல எடுக்கப்பட்டிருக்கும். கார்த்தியுடன் அர்ஜுன் தாஸ், நரைன், ஜார்ஜ் மரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பார்கள். அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த கைதி படம் (Kaithi 2 Update) கார்த்தியின் திரையுலக வாழ்க்கைக்கு மேலும் ஒரு எழுச்சியைக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டில்லி திரும்ப வருவான்

விக்ரம் படத்தின் மூலம் இவர் உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ், ரோலக்ஸ் கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வரிசையில் லியோவும் இணைந்தது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படமாக LCU வரிசை படத்தைத் திட்டமிட்டுள்ளார். இப்படத்தை இயக்க உள்ளதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Latest Slideshows

Leave a Reply