Kajol Deep Fake Video : ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து நடிகை கஜோலை துரத்தும் டீப்ஃபேக்
நடிகை ராஷ்மிகா மந்தனா, கத்ரீனாவை தொடர்ந்து நடிகை கஜோலின் டீப்ஃபேக் வீடியோ (Kajol Deep Fake Video) ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவாலா பாடலுக்கு தமன்னாவின் வீடியோவை சிம்ரனின் வீடியோவாக AI மாற்றியபோது அனைவரும் அதைப் பாராட்டத் தொடங்கினர், அதன் பின் விளைவுகளை யாரும் கவனிக்கவில்லை. தற்போது நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் எல்லை மீறி வெளியாகி வரும் போது தான் அந்த அச்சத்தை உணர ஆரம்பித்துள்ளனர்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது, புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் கத்ரீனா கைஃப், கஜோல் உள்ளிட்ட நடிகைகளின் போலியான வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக நடிகைகளை ஆபாசமாக போட்டோ எடிட் செய்து பல்வேறு இணையதளங்களில் வெளியிட்டு வரும் நிலையில், சில தளங்களில் முகத்துக்கும் உடலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் கேவலமாக எடிட் செய்யப்பட்டு வெளியாகும் வீடியோக்களே இணையத்தில் தீவிரமாக பரவி நடிகைகளை அச்சுறுத்தி வந்தன. இந்நிலையில், அதைவிட மோசமாக வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தால் அச்சு அசல் நடிகையின் உண்மையான வீடியோவே தோற்றுவிடும் அளவுக்கு போலிக்கான AI-எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் உருவாகி வருகின்றன.
எதிர்ப்பு தெரிவித்த ராஷ்மிகா :
நடிகை தமன்னா காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவை சிம்ரன் ஆடுவது போன்றும் கியாரா அத்வானி மற்றும் காஜல் அகர்வால் போன்ற மற்ற நடிகைகள் நடனம் ஆடுவது போன்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களுடன் பகிரப்பட்டது. இந்த வீடியோக்களை பார்த்து அனைவரும் ரசித்தனர். ஆனால் தன்னுடைய போலியான வீடியோவைப் பார்த்து முதன்முதலில் இது தவறான விஷயம் என ராஷ்மிகா மந்தனா எதிர்ப்பு குரல் தெரிவிக்க அமிதாப் பச்சன் முதல் பல நடிகர்கள் ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோவைப் பார்த்து அது தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்து அவருக்கு ஆதரவளித்துள்ளனர். அந்த வீடியோ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Kajol Deep Fake Video - கஜோலின் டீப்ஃபேக் வீடியோ :
Kajol Deep Fake Video : சமீபத்தில், கத்ரீனா கைஃபின் வீடியோ ஒன்று டீப்ஃபேக் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் தற்போது நடிகை கஜோலின் டீப்ஃபேக் (Kajol Deep Fake Video) வீடியோவும் சிக்கியுள்ளது. ‘Get Ready with Me’ என்ற டிரெண்டிங் ரீல்ஸில் பிரபலங்கள் ரெடியாகும் வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், வேறொரு மற்றொரு மாடல் வெளியிட்டுள்ள வீடியோவில், கஜோலின் முகத்தை எடிட் செய்து கஜோலின் வீடியோ (Kajol Deep Fake Video) போன்று சித்தரித்துள்ளனர். இன்னும் இந்த AI என்ன பிரச்சனைகளை உருவாக்கும் என்று தெரியவில்லை.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?