Kakkan Movie Promo : கக்கன் படத்தின் ப்ரோமோ வெளியீடு...

Kakkan Movie Promo :

Kakkan Movie Promo : மூத்த அரசியல்வாதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ (Kakkan Movie Promo) வெளியாகியுள்ளது.

சுதந்திர போராட்ட வீரரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. தன் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை பொது வாழ்வில் எளிமையையும் நேர்மையையும் கடைப்பிடித்த அரசியல் தலைவர் கக்கன் ஆவார். கக்கன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். கக்கன், மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் நேருவின் ஆட்சிக் காலத்தில் அதாவது 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்தார்.

காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆட்சியின் போது கக்கன் தமிழக அமைச்சராகவும் இருந்தார். எளிமை மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற ககனின் வாழ்க்கை வரலாறு இன்று திரைப்படமாக உருவாகிறது. இந்த படத்தை பிரபு மாணிக்கம் இயக்கி வருகிறார். ஷங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கக்கன் திரைப்படத்தை தயாரிக்கிறது. இசைமைப்பாளர் தேவா இப்படத்திற்கு இசைமைக்கிறார். இந்த படத்திற்கு வெங்கி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கக்கன் பிறந்த மதுரா மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. கடந்த மாதம் கக்கன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில்நடைபெற்றது .

இந்த வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு இசை மற்றும் ட்ரைலரை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் நிர்வாகிகள் ஈவிகேஸ் இளங்கோவன், கோபண்ணா, ஹசன் மௌலானா, அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், தியாகி கக்கன் மகள் கஸ்தூரி பாய், சேலம் சரக காவல் துணைதலைவர் எஸ்.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் கக்கன் திரைப்படத்தில் இருந்து தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று (Kakkan Movie Promo) வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் வெள்ளைக்காரர்களை எதிர்த்து போராடலாம் என்று சிறுவன் பேசும் வசனம், கூட்டம் கூடி பேசுதல் மற்றும் பின்னணி இசை என்று ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply