Kalaignar 100 Event : கலைஞர் நூற்றாண்டு விழாவில் காலியாக இருந்த இருக்கைகள்

Kalaignar 100 Event : கலைஞர் கருணாநிதி திரைப்படத்துறைக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை விளக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் “கலைஞர் 100” விழாவிற்கு ஏற்பாடு செய்தது. கலைஞர் 100 விழாவில் (Kalaignar 100 Event) தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் கலந்து கொள்ளாதது பேச்சு பொருளாக உள்ளது.

Kalaignar 100 Event - கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா :

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை (Kalaignar 100 Event) தமிழக அரசு கொண்டாடி வருகிறது. அந்த வகையில் அவர் திரையுலகிற்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பை விளக்கும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு டிசம்பர் 24, 2023 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் மிக்ஜாம் சூறாவளியின் தாக்கம் காரணமாக ஜனவரி 6 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. மேலும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக கூறப்படும் நிகழ்ச்சி நேற்று கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அளிக்கப்பட்ட அழைப்பிதழில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் முன்னிலை வகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. தனுஷ், சூர்யா, நயன்தாரா, கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், வடிவேலு, ரோஜா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பும் விஜய், அஜித் இருவரும் பங்கேற்பார்களா? என்பதில் தான் இருந்தது.

அஜித் எப்போதும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதவர். கடந்த 2006-2011-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அன்றைய முதல்வர் கருணாநிதியை தமிழ் திரையுலகினர் சார்பில்  “பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகினர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அஜித், “இதுபோன்ற விழாவுக்கு வருமாறு தங்களை வற்புறுத்துகிறார்கள்” என்று வெளிப்படையாக குற்றம் சாட்டினார். இது திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர் கண்டிப்பாக கலந்து கொள்ள மாட்டார் என்று கூறியது போலவே அஜித் வரவே இல்லை. அதேசமயம் விஜய் இதுபோன்ற ஆளுங்கட்சி நிகழ்ச்சியில் அதிக எதிர்ப்பு இல்லாமல் கலந்து கொள்வார். ஆனால் அவர் வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில வருடங்களாக அரசியலுக்கு வருவதில் தீவிரம் காட்டி வரும் விஜய் அதை கருத்தில் கொள்ளவில்லை என்று ஒரு பக்கம் இணையத்தில் வைரலானது. ஆனால், அவர் ஊரில் இல்லை என்றும் கூறப்படுகிறது. எது எப்படியோ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இல்லாமல் விழா முடிந்தது.

காலியாக இருந்த இருக்கைகள் :

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது இருக்கைகள் காலியாக இருந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. கலைஞர் 100 நிகழ்ச்சி (Kalaignar 100 Event) இவ்வளவு கூட்டம் இல்லாமல் நடந்ததற்கு விஜய்-அஜித் தான் காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருவரும் சென்றிருந்தால் இந்த நிகழ்வு இப்படி இருந்திருக்காது, கோலிவுட்டின் மாஸ் நடிகர்கள் யார் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள் என இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் சினிமா வட்டாரத்தில் வேறு விதமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய், அஜித் இருவரும் முதலியிலேயே வருவது என்பது சந்தேகம் தான் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், 22,000 இருக்கைகள் கொண்ட கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் விழா நடத்துவது சாதாரண விஷயமல்ல. மேலும் தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த விழா என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சிறிது தாமதம் ஏற்பட்டது. இதனால் ரஜினி, செயல்தலைவர் ஸ்டாலின் பேசும்போது சில பகுதிகளில் நேரமின்மையால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கலைந்து சென்றனர். அந்த பகுதியின் புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது என தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply