Kalaignar 100 Years Celebration : தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா

Kalaignar 100 Years Celebration :

அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் சினிமாவில் முக்கிய பங்காற்றிய முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை (Kalaignar 100 Years Celebration) சிறப்பாக கொண்டாட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ள நிலையில் ரஜினி மற்றும் கமலுக்கு நேரில் அழைப்புவிடுத்துள்ளனர். 

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு (Kalaignar 100 Years Celebration) கொண்டாடப்பட்டது. கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் ஆண்டு (Kalaignar 100 Years Celebration) என்பதால், கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கலைஞரின் நூற்றாண்டு விழாவை திமுகவினர் தொடர்ந்து கொண்டாடி வரும் நிலையில், தமிழ் திரையுலகில் பிரமாண்ட விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் சினிமாவில் முக்கிய பங்காற்றிய முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை (Kalaignar 100 Years Celebration) சிறப்பாக கொண்டாட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திரையுலக நட்சத்திரங்கள் தொடங்கி தொழில்நுட்ப வல்லுநர்கள், ஃபெஃப்சி தொழிலாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் என அனைத்து தரப்பு மக்களும் விழாவில் கலந்துகொள்வார்கள் என்றும், இதுகுறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி முன்னதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் பிரமாண்டமாக நடைபெற உள்ளதால், விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிரமாக செய்து வருகிறது.

ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு :

இந்நிலையில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வருமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நேரில் அழைப்பு விடுத்துள்ளது. விழாக்குழு சார்பில் நடிகர் ரஜினிகாந்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் நேரில் அழைத்தனர். இந்த விழாவில் கண்டிப்பாக வந்து பங்கேற்பேன் என்று ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.

அதேபோல் நடிகர் கமல்ஹாசனை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என்.ராமசாமி செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் நேரில் சென்று அழைத்தனர். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனும் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முறையான அனுமதி பெற்று விழா குறித்த கூடுதல் தகவல்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த விழா வரும் டிசம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply