Kalaignar Award Presented To Actor Sathyaraj : நடிகர் சத்யராஜீக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது

நடிகர் சத்யராஜ் கலைத்துறையில் இருந்து கொண்டே திராவிட இயக்கக் கருத்துக்களை பரப்பி வருகிறார். அவருக்கு கலைஞர் விருது வழங்குவதில் (Kalaignar Award Presented To Actor Sathyaraj) பெருமை கொள்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார் (Kalaignar Award Presented To Actor Sathyaraj)

முத்தமிழ் பேரவையின் 50-வது பொன்விழா சென்னையில் நடந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். நடிகர் சத்யராஜுக்கு ‘கலைஞர் விருது’ (Kalaignar Award Presented To Actor Sathyaraj), கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு ‘இயல் செல்வம் விருது’, திருப்பாம்புரம் டி.கே.எஸ். மீனாட்சி சுந்தரத்துக்கு ‘ராஜரத்னா விருது’, டாக்டர் காயத்ரி கிரிஷீக்கு ‘இசை செல்வம் விருது’, திருக்கடையூர் டி.எஸ்.உமாசங்கருக்கு ‘நாதஸ்வர செல்வம் விருது’, சுவாமிமலை சி.குருநாதனுக்கு ‘தவில் செல்வம் விருது’, டாக்டர் டி.சோமசுந்தரத்துக்கு ‘கிராமிய கலைச் செல்வம் விருது’ மற்றும் பார்வதி ரவி கண்டசாலாவுக்கு ‘நாட்டியச் செல்வம் விருது’ ஆகிவற்றை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா மலராக எழுத்தாளர் துமிலன் எழுதிய டி.என்.ராஜரத்தினத்தின் வாழ்க்கை சரிதம் நூலை முதலமைச்சர் வெளியிட்டார். ராஜரத்தினத்தின் புதல்வி வனஜா சுப்ரமணியம்  அதன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது

பின்னர் விழாவில் முதல்வர் பேசுகையில் முத்தமிழ்ப் பேரவை தொடங்கியதில் இருந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரத்தை ஒதுக்கி, தனது கடமையாக கருதி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். அவர் மூலம் நான் எனது கடமையை தொடர்ந்து செய்து வருகிறேன். கலை, இசை, நாடகம் என அனைத்திலும் முத்திரை பதித்தவர் கருணாநிதி. முத்தமிழ்ப் பேரவை வழங்கும் இந்த விருது கருணாநிதியே (Kalaignar Award Presented To Actor Sathyaraj) வழங்கிய விருதை முன்மாதிரியாகக் கொண்டது.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதே நம் முழக்கம்; இசையில் தமிழும் கேட்க வேண்டும். இடையில் ஜாதி, மதத்தின் பெயரால் வேற்று மொழிகள் மூலம் பண்பாட்டுத் தாக்குதல்கள் நடந்தாலும், தமிழின் வலிமையும், பண்பாட்டின் மேன்மையும் தான் தமிழ், தமிழினம், தமிழகம் எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கக் காரணம். எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு. அந்த இரண்டையும் கண்போல காப்போம் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் சத்யராஜ் கலைத்துறையில் இருந்து கொண்டே திராவிட இயக்கக் கருத்துக்களை பரப்பி வருகிறார். அவருக்கு விருது வழங்குவதில் (Kalaignar Award Presented To Actor Sathyaraj) நான் மிகவும் பெருமை கொள்கிறேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply