Kalaignar Magalir Urimai Thogai : உங்களுக்கு குறுந்செய்தி வந்துள்ளதா?

தமிழ்நாட்டில் வழங்கப்பட உள்ள ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் மூன்றில் ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏன் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.

1 கோடி பேருக்கு ஒதுக்கப்பட்ட நிதி :

தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 23 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில் 1 கோடி பேரை மட்டும் திட்டத்தில் சேர்த்தால், திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் எதிர் நிலைப்பாடு எடுக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இத்திட்டத்தில் கூடுதலாக 6.5 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர்.

Kalaignar Magalir Urimai Thogai பெற மொத்தம் 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் :

பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டதில் (Kalaignar Magalir Urimai Thogai) மொத்தமாக 1 கோடியே 63 லட்சம் பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்து இருந்தனர். இதற்கிடையே தகுதிப் பட்டியலில் வரும் அத்தனை பேருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் கூறியதால் விண்ணப்பித்த 1 கோடியே 63 லட்சம் பேரில் சிலர் மட்டுமே நிராகரிக்கப்பட்டு சுமார் ஒன்றரை கோடி லட்சம் பேராவது தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு :

ஆனால் தமிழக அரசானது நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மொத்தமாக விண்ணப்பித்த 1 கோடியே 63 லட்சம் பேரில் தேர்வுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமை தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

56 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்?

பெண்களுக்கு என மாதம்தோறும் 1000 ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது (Kalaignar Magalir Urimai Thogai) வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் இந்த திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலோனோர் நிராகரிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் பெரிய அதிருப்தியும் உருவாகியுள்ளது. சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன.

இவ்வளவு நிராகரிப்பு ஏன்?

மொத்தமாக 56 லட்சத்து 50 ஆயிரம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். எந்த காரணத்துக்காக இவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் மேல்முறையீடு செய்வது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது . ஒரு ஆண்டு சராசரி வருமானம் 2.5 Lakhs அதிகமாக பெறக்கூடியவர்கள், ஆண்டு ஒன்றுக்கு 3600 யூனிட் மின்சாரத்துக்கு மேல் பயன்படுத்துபவர்கள், Car, Jeef, டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர் நிராகரிப்பு பட்டியலில் அதிகமாக இடம்பெற்றுள்ளனர் என்கிறார்கள் அதிகாரிகள், அதேசமயம் ஆவணங்கள் சரியாக சமர்ப்பிக்காமல் உங்களது விண்ணப்பம் நிராகரிப்பு ஆகியிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என்பதே தற்போதுள்ள ஒரே ஆறுதலாக உள்ளது.

உங்களுக்கு குறுந்செய்தி வந்துள்ளதா?

இந்த நிலையில் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை செய்தார். ஏழை, எளிய குடும்பத் தலைவிகளின் பொருளாதாரம் மேம்பட உறுதிப்படுத்தக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை இன்னும் 2 நாட்களுக்குள் தொடங்கி வைப்பேன். தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் திரு.அண்ணாதுரை பிறந்தநாளான வரும் 15 ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக இன்று செப்13-ல் தேர்வு செய்யப்பட்ட மகளிர்களின் வங்கி கணக்கை தமிழக அரசு தற்போது பரிசோதித்து வருகிறது. அதற்காக அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1 மற்றும் 0.19 பைசா என்ற தொகையை செலுத்தி வருகின்றது. மேலும் தங்களுக்கு எந்த குறுந்செய்தி (SMS) வரவில்லை என்றாலும் யாரும் பயப்படவேண்டாம் திட்டமிட்டபடி உங்களது வங்கி கணக்கில் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply