Kalaignar Nootrandu Vizha : நடிகர் சங்கம் நடத்தும் கலைஞர் 100 நூற்றாண்டு விழா ஜனவரிக்கு மாற்றம்

Kalaignar Nootrandu Vizha :

தமிழ் திரையுலகம் சார்பில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த Kalaignar Nootrandu Vizha ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிஜாம் புயல் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா, தமிழக அரசு சார்பில் ஜூன் 3 ஆம் தேதி முதல் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, கலைஞர் 100 நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழ் திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்த் திரையுலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், பிற திரையுலக சங்கங்கள் இணைந்து கலைஞர் 100 நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்” நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் விழாவை குறைந்தது 35000 பேர் அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது. நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி நிகழ்ச்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் 100 நூற்றாண்டு நிகழ்ச்சி நடத்த பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில், தன்னிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பார்களே அதேபோல் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர். நல்ல சிந்தனைகளையும், அர்த்தமுள்ள பாடல்களையும் தன் திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் பதிய வைத்த மாபெரும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானதில் முக்கியப் பங்காற்றிய பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். தன்னலமற்ற தியாகங்கள், சாதனைகள், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளதை கருத்தில் கொண்டு கலைஞரின் நூற்றாண்டு விழாவை (Kalaignar Nootrandu Vizha) இன்னொரு நாளில் கொண்டாட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இந்நிலையில் மிக்ஜாம் புயலின் வெள்ள சேதத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தத்தளித்து வருகின்றன. இதையடுத்து சேலத்தில் வரும் 17ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு 24ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வரும் 24ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த Kalaignar Nootrandu Vizha ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply