Kalanithi Maran Gifts To Ranjikanth And Nelson : ரஜினிகாந்தை தொடர்ந்து நெல்சனுக்கு பரிசளித்த கலாநிதி மாறன்

Kalanithi Maran Gifts To Ranjikanth And Nelson :

ஜெயிலரின் இமாலய வெற்றியை எதிரொலிக்கும் வகையில், இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஒரு அற்புதமான ஆச்சரியத்தை அளித்துள்ளார். நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் நெல்சன், தனது தனித்துவமான டார்க் காமெடி, ஆக்‌ஷன், பொழுதுபோக்கு படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர் இயக்கிய அடுத்த படமான ‘டாக்டர்’ நெல்சன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தளபதி விஜய்யுடன் கைகோர்த்த இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படமும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் மறுபுறம் இயக்குனர் நெல்சன் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்தின் கடைசி படங்களான தர்பார் மற்றும் அண்ணாத்த ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குனர் நெல்சன் ஜெயிலரில் இணைந்தனர். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் ரஜினிகாந்தின் நான்காவது படமாக ஜெயிலர் படத்தை தயாரித்தார். நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன், மிர்னா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இது மட்டுமில்லாமல் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவா ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, நிர்மல் படத்தொகுப்பு செய்ய ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை இந்த படம் 525 கோடிக்கு மேல் வசூலித்த ஜெயிலர் தற்போது மூன்றாவது வார இறுதியில் சாதனை படைக்கும் என தெரிகிறது. முன்னதாக, Kalanithi Maran Gifts To Ranjikanth And Nelson : ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அவருக்கு காசோலை கொடுத்து, விலை உயர்ந்த BMW எக்ஸ்7 காரை பரிசளித்து ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் இயக்குனர் நெல்சனுக்கு காசோலை கொடுத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சனை ஆச்சர்யப்படுத்தும் வகையில் விலை உயர்ந்த BMW, PORSCHE உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களை நிறுத்தி வைத்து அவரையே தேர்வு செய்ய சொல்லி ‘போர்ஷே’ காரை பரிசாக கொடுத்தார். இந்த அற்புதமான நிகழ்வின் காணொளி (Kalanithi Maran Gifts To Ranjikanth And Nelson) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கலாநிதி மாறனுக்கு நெல்சன் நன்றி தெரிவித்துள்ளார். நெல்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜெயிலரின் வெற்றிக்காக இந்த அழகான காரை எனக்கு பரிசளித்ததற்கு மிக்க நன்றி கலாநிதிமாறன் சார், உங்களுடன் இணைந்தது ஒரு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. காசோலை உண்மையிலேயே ஆச்சரியத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply