Kalki 2898 AD Release Date : ‘கல்கி 2898 AD' ன் புதிய ரிலீஸ் தேதி போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது

Kalki 2898 AD Release Date :

இன்று 12/01/2024  ‘கல்கி 2898 AD’ படக் குழு ஆனது உலகம் முழுவதும் கல்கி 2898 AD மே 9 ஆம் தேதி திரைக்கு (Kalki 2898 AD Release Date) வரும் என்று அறிவித்துள்ளது. ‘கல்கி 2898 AD’ படத்தை சங்கராந்திக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். நடிகர் பிரபாஸ் தனது கடைசி படமான சலார் மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டரைப்  பெற்றுள்ளார். நடிகர் பிரபாஸின் ‘சலார்’ படத்தின் நல்ல பாக்ஸ் ஆபிஸ் ஓட்டத்தை அனுமதிப்பதை மனதில் வைத்து, ‘கல்கி 2898 AD’ படக் குழு ஆனது அதன் வெளியீட்டை தேதியை மாற்றி உள்ளது. தற்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் போன்ற நட்சத்திர நடிகர்களைக் கொண்ட ‘கல்கி 2898 AD’ படம் புதிய வெளியீட்டு தேதியைப் பெற்றுள்ளது. இன்று 12/01/2024  ‘கல்கி 2898 AD’ படக் குழு ஆனது கல்கி 2898 AD-யை மே 9ஆம் தேதி வெளியிடுவதாக (Kalki 2898 AD Release Date) அறிவித்துள்ளது.

‘கல்கி 2898 AD’ படத்தின் மே 9 ஆம் தேதி வெளியீட்டு தேதி போஸ்டரில் பிரபாஸ் முற்றிலும் புதிய அவதாரத்தில் காட்சியளிக்கிறார். நடிகர் பிரபாஸ் கேடயம் அணிந்து கையில் குச்சியை பிடித்துள்ளார். நடிகர் பிரபாஸ் நீண்ட முடி மற்றும் தாடியுடன் ஆடம்பரமாக இருக்கிறார். அந்த போஸ்டரில் ஒரு விண்கலத்தையும் பார்க்க முடிகிறது. நடிகர் அமிதாப் பச்சன் சமூக ஊடகங்களில் பிரபாஸின் போஸ்டரை பகிர்ந்து, ”சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் முடிந்த கதை. Begins May 9th, 2024 எதிர்காலம் ஆனது வெளிப்படுகிறது. #Kalki2898AD(sic)” என்று கூறியுள்ளார். நடிகர் பிரபாஸ் சமூக ஊடகங்களில் தனது போஸ்டரைப் பகிர்ந்து, ”வரும் எதிர்காலத்திற்கான கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது! #Kalki2898AD உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் 9 மே 2024 அன்று” என்று கூறியுள்ளார். ‘கல்கி 2898 AD ஆனது நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் (Science Fiction) படம் ஆகும். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த சயின்ஸ் பிக்‌ஷன் படத்தின் முதல் தோற்றம் ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த ‘கல்கி 2898 AD‘ படத்தின் மொத்த பட்ஜெட் ஆனது ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ‘கல்கி 2898 AD’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே ரூ.200 கோடியை படக்குழு செலவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் முக்கிய அங்கமாக இருப்பதால் இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத தரத்துடன் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த  ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்துள்ளார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும்  திரைப்படங்களில் கல்கி 2898 AD படமும் ஒன்றாகும். சான் டியாகோ காமிக்-கான் நிகழ்வில் வெளியிடப்பட்ட இந்த ‘கல்கி 2898 AD’ படத்தின் முதல் பார்வை (First Review) ஆனது உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அஸ்வினி தத் தயாரித்த இப்படம் வைஜெயந்தி மூவீஸின் பொன்விழா திட்டத்தை குறிக்கிறது. கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமல்ஹாசன் சமீபத்தில் செட்டில் இணைந்தார், இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு பகுதிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்கி 2898 AD உலகம் முழுவதும் மே 9 ஆம் தேதி திரைக்கு (Kalki 2898 AD Release Date) வரும் என்று தயாரிப்பாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.  

Latest Slideshows

Leave a Reply