Kamal Haasan 233 Movie : நடிகர் கமலஹாசன் தனது 233 வது படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்

Kamal Haasan 233 Movie :

உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசன் தனது 233 வது (Kamal Haasan 233 Movie) திரைப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் வினோத் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை  மற்றும் துணிவு போன்ற சிறந்த படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம்  இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறது.  இத்திரைப்படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வேடத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கிறார்.

நடிகர் கமலஹாசன் விக்ரம், விஸ்வரூபம் போன்ற பல திரைப்படங்களில் ஏற்கேனவே பாதுகாப்புத் துறை சார்ந்த அதிகாரி  வேடங்களில் நடித்து மிரள வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்  இந்தப் படத்தினுடைய முக்கியத்துவம் ஆனது தற்போது கூடியிருக்கிறது. இந்த படத்தில் (Kamal Haasan 233 Movie) சாருஹாசனுக்காக ஒரு பாடலை கமல்ஹாசன் பாடவுள்ளார். ஒன்பது வருடங்களுக்கு பின்னர் இந்த படத்தில் பழம்பெரும் காமெடி நடிகர் ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். காமெடி நடிகர் ஜனகராஜ்  இந்த படத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரராகவும் மற்றும் நாயகியின் தந்தையாகவும் நடிப்பதாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.

Kamal Haasan 233 Movie : இந்தப் படத்தினுடைய முதல் கட்ட அறிவிப்பு ரைஸ் டூ ரூல் (Rise To Rule) என்ற தலைப்பில் நடிகர் கமலஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்க கூடிய வீடியோ ஏற்கேனவே வெளியாகி அதிகம் பகிரப்பட்டுள்ளது. வீடியோ வலைத்தளத்தில் மிகவும் வைரலானது. அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடியதாக நடிகராக திகழ்கிறார். அதன்  காரணமாகவே நடிகர் கமலஹாசன்  உலக நாயகன் என்று அழைக்கப்படுகிறார். கமலஹாசன் தற்போது மீண்டும் இந்திய அளவில் அதிகம் சம்பளம் பெறக்கூடிய நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.

Latest Slideshows

Leave a Reply