Kamal Haasan 234th Film : கமல்ஹாசனனின் 234 வது படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான்

Kamal Haasan 234th Film : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘KH 234’ படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘இந்தியன் 2’ படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், பிரபாஸின் கல்கி 2829 ஏ.டி, எச்.வினோத், மணிரத்னம் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார். நாயகன் படத்திற்கு பிறகு 35 வருடங்கள் கழித்து கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் KH234 (Kamal Haasan 234th Film) படத்தில் இணைகின்றனர்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Kamal Haasan 234th Film - 234 வது படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் :

இந்நிலையில், இந்த படத்தில் கமலுடன் நடிகர் துல்கர் சல்மான் இணையவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த ஓகே காதல் கண்மணி படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கமலுடன் துல்கர் சல்மான் தவிர நடிகை த்ரிஷாவும் நடிக்கவுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் இணைகிறார். மேலும் த்ரிஷா கமலுடன் இணைந்து மன்மதன் அம்பு, தூங்காவனம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இது தொடர்பான போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல் பிறந்தநாளில் வெளியாகும் அப்டேட் :

Kamal Haasan 234th Film : இந்நிலையில் நாளை நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்த நாளை கொண்டாடும் வகையில் தற்போது கமல் நடித்து வரும் படங்களின் அப்டேட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக உள்ளன. கமல் நடிப்பில் ஷங்கரின் இந்தியன் 2 படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, மணிரத்னம் இயக்கும் KH234 படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி படத்திற்கு ‘தக் லைஃப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவில், என் பேரு ரங்க ராயர் சக்திவேல் நாயக்கன் காயல்பட்டினக்காரன் என தனக்கே உரிய பாணியில் இன்ட்ரோ கொடுத்துள்ளார் கமல். இந்த வீடியோவில் கமலின் ஆக்‌ஷன் காட்சிகள் கவனம் ஈர்க்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply