Kamal Haasan 69th Birthday Wishes : கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

Kamal Haasan 69th Birthday Wishes :

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அமீர் கான் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலருக்கும் பிறந்தநாள் பார்ட்டி (Kamal Haasan 69th Birthday Wishes) கொடுத்திருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளையொட்டி நேற்று மதியம் சென்னையில் உள்ள 5 Star ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களுக்கு மதிய விருந்து அளித்தார். இரவு திரையுலக பிரபலங்களுக்கு விருந்து வைத்து தனது பிறந்தநாளை கொண்டாடினார். தாயாரின் சிகிச்சைக்காக சென்னையில் தங்கியுள்ள இந்தி நடிகர் அமீர்கான் நேற்று நடந்த கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களை ‘தக் லைஃப்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், இயக்குனர், நடிகர் பார்த்திபன் ஆகியோர் பகிர்ந்துள்ளனர். ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் சூர்யா மற்றும் அமீர்கான் உள்ளனர். ‘கஜினி’ இந்தி படத்துக்கு ரவி கே சந்திரன் தான்  ஒளிப்பதிவாளர். அவர் தனது பதிவில், “கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் ஒரே பிரேமில் இரண்டு கஜினிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள் பங்கேற்பு :

Kamal Haasan 69th Birthday Wishes : கமலின் பிறந்தநாள் விழாவில் பிரபல ஏவிஎம் நிறுவனத்தின் தலைவர் சரவணன் கலந்து கொண்டார். அவரை அமோக வரவேற்பு அளித்த கமல்ஹாசன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நடிகர் கமல்ஹாசனை வைத்து ஏவிஎம் நிறுவனம் பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை தயாரித்து இருக்கிறது. நடிகர் நரேன் மற்றும் நடிகர் விக்ரம் பிரபுவும் கமலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். நடிகர் நரேன் மற்றும் அவரது மகளுடன் கமல்ஹாசனுடம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நடிகர் நரேன் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்திருந்தார். கமலின் பிறந்தநாள் விழாவில் நடிகை குஷ்புவும் கலந்து கொண்டார். கமலுக்கு ஆசைப்பட்டு வாங்கி வந்த பூங்கொத்தை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து (Kamal Haasan 69th Birthday Wishes) தெரிவித்தார்.

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி ‘இந்தியன் – 2’ படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply