Kamal Haasan In KH 234 நாயகன் படம் மாதிரி இருக்கும்… எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கமல் அடுத்ததாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் KH 234 படத்தில் நடிக்கவுள்ளார். அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது விழாவில் இந்தப் படம் குறித்து கமல்ஹாசன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று நடைபெற்ற IIFA 2023 விருது விழாவில் கமலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு விக்ரம் படத்தின் மூலம் செம்ம மாஸ்ஸாக கம்பேக் கொடுத்த கமல் தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதனிடையே நேற்று அபுதாபியில் நடந்த IIFA 2023 விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசனுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் விருது வழங்கினார்.

செய்தியாளர்களை சந்தித்த கமல்

இதனைத்தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த கமல் தனது 234வது படம் குறித்து பேசினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கமல் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 234வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி KH 234 படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குவது உறுதியானது. KH 234 படம் குறித்து கமல்ஹாசன் மனம் திறந்து கூறியதாவது. KH 234 படத்தின் வேலையை தொடங்கிவிட்டோம். படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எங்களை பதற்றமடையச் செய்கிறது.இருப்பினும் நாங்கள் கூலாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

ரெட் ஜெயண்ட், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். கமல் மணிரத்தனம் கூட்டணியில் 1987-ஆம் ஆண்டு வெளியான நாயகன் தமிழ் சினிமாவில் ஒரு ஐக்கானிக் படமாக அமைந்தது. சுமார் 37 வருடங்களுக்கு பின்னர் இக்கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானதை அடுத்து KH 234 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் மணிரத்னம் பிஸியாக இருக்கிறார்.

KH 234 நாயகன் படம் போல இருக்கும்

அதேபோல் இந்தியன் 2 படத்தின் வேலைகளை முடித்துவிட்டு கமல் உடனடியாக KH 234 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.மேலும் KH 234 – படமும் நாயகன் படம் போல் தான் இருக்கும் என்று செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனால் KH 234 படத்தில் கமல் டான் கேரக்டரில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.அதேபோல் KH 234 கேங்ஸ்டர் ஜானர் படமாக இருக்கும் எனவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பானது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply