Kamal Haasan On Amaran Success : அமரன் பட வெற்றிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அமரன். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் (Kamal Haasan On Amaran Success) உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த்தாகவும், சாய் பல்லவி அவரது மனைவி இந்துவாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

அமரன் கதைக்களம்

மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமரணத்தைத் தொடர்ந்து, இந்திய அரசு அவருக்கு அசோக சக்ரா விருது அறிவித்தது. முகுந்தின் மனைவியாக நடிக்கும் சாய் பல்லவியின் பார்வையில் அமரன் கதை தொடங்குகிறது. முகுந்த் மெட்ராஸ் கிறித்துவ கல்லூரியில் இந்துவின் சீனியராக இருக்கிறார். பாண்டிச்சேரியில் நடக்கும் ரேம்ப் வாக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்துவுக்கு முகுந்த் பயிற்சி அளிக்கிறார். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்து தன் காதலை தனது வீட்டில் தெரிவிக்கிறார். இந்துவின் தந்தை தனது மகளை ராணுவ வீரருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி இந்துவும் முகுந்தும் திருமணம் செய்து கொள்வதில் முதல் பாதி முடிகிறது. முகுந்த் ராணுவத்தில் கேப்டன், மேஜர் என (Kamal Haasan On Amaran Success) அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்கிறார். 44 ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் படைப்பிரிவின் கம்பேனி கமாண்டராக பொறுப்பேற்கிறார். காஷ்மீரில் தீவிரவாத கும்பலின் படைத்தலைவரான அல்தாஃப்வானியை பிடிக்கும் போது முகுந்த் மரணமடைகிறார். இதுவே படத்தின் கதையாகும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வெளியிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் அறிக்கை (Kamal Haasan On Amaran Success)

இது குறித்து அவர் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமரன் படத்திற்கு திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அமரன் படத்தை அறிவித்தபோது சில வேலைகள் சந்தோசத்தை தரும். சில வேலைகள் கௌவுரவத்தையும் புகழையும் தரும். அமரன் அனைவருக்குமே பெருமை தேடித் தரும் என்று சொன்னேன். நல்ல படத்தை மக்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையை அமரனின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் சிந்திய ரத்தத்திற்கும், அவரது அன்புக்குரியவர்களின் கண்ணீருக்கும் எங்களின் எளிய காணிக்கைதான் இந்த அமரன். இது ஒரு தனி நபரின் கதை மட்டுமல்ல. இது இந்திய மண்ணைக் காக்கும் ஒவ்வொரு ராணுவ வீரரின் மற்றும் ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் கதை. தம்பி சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் திரைப் பயணம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இவரின் முழுமையான பங்களிப்பும் உழைப்பும் திரை ரசிகர்களால் நீண்டகாலம் பாராட்டப்படும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன். மேஜரின் காதல் மனைவி இந்து வர்கீஸ் இந்த தேசம் போற்றும் இரும்புப் பெண்மணி. சாய் பல்லவி அவரது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் படத்துக்கு பெரிய பலம். ஜி.வி. இசையால் உயிரூட்டியிருக்கிறார்.

ஒரு மகத்தான மாவீரனின் சரிதையை படமாக்குவது எளிதான காரியம் அல்ல. அந்த வகையில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விரிவான ஆய்வுகள், களப்பணி செய்து தரவுகளை திரட்டி சுவாரசியமான திரைக்கதையாக தொகுத்துள்ளார். ஒரு நல்ல திரைப்படம் என்பது கனவு அல்ல. கூட்டு நன்மையில் நம்பிக்கையுடன் செயல்படுவது ஒரு பொதுவான கனவு. நாட்டைக் காக்கத் தன்னைத் தியாகம் செய்த மாபெரும் தமிழ் மாவீரனுக்கு அமரன் திரைப்படத்தை சமர்ப்பணம் செய்து நாம் அறிந்திராத ராணுவ வாழ்க்கை (Kamal Haasan On Amaran Success) ராணுவ வீரனின் குடும்பங்களில் செய்யும் தியாகங்களை மக்கள் அறியும் படமாக அமரன் அமைந்ததில் நானும் எனது சகோதரர் ஆர்.மகேந்திரனும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply