Kamal Haasan Oscar Award: அடுத்த ஆஸ்கர் கதவை தட்டப்போகும் உலகநாயகன்

ஒரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டாலும் விருது தான் ஒரு சரியான அங்கீகாரம் ஆகும். அதிலும் குறிப்பாக ஆஸ்கர் விருது என்பது பலரின் கனவாகவே இருந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’ மாபெரும் வெற்றி பெற்றது. இசைமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு ’ பாடலானது மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ‘கோல்டன் குளோப்’ விருதை வென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது ’95 வது ஆஸ்கர்’ விருதையும் பெற்றுள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு திரையுலகினர் உள்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Kamal Haasan Oscar Award: உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்த ஆஸ்கர் விருதுக்கு தயாராகி வருகிறார். அதாவது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்தியன் படத்தில் தாத்தாவாக, சேனாதிபதி கதாபாத்திரத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ‘இந்தியன் 2’ திரைப்படம் சேனாதிபதியின் இளமைக் காலத்து கதையை கொண்டதாகும். எனவே சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக பிரமாண்ட செட் ஒன்றை தயார் செய்துள்ளனர். அந்த செட்டை பார்த்த அனைவருமே பிரம்மித்தனர். ஏனென்றால் அச்சு அசலாக அந்தக் காலத்திற்கே சென்றுவிட்டனர்.

இந்தியன் 2 படக்குழுவினரை வேறு உலகத்திற்கு சென்றுவிட்டதாக பலர் கூறியுள்ளனர். இந்தியன் 2 திரைப்படத்திற்கு கண்டிப்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என படக்குழுவினர் அனைவரும் மார்பை தட்டிக் கொள்கின்றனர். அந்தளவுக்கு படத்தில் ஒவ்வொரு விஷயமும் உன்னிப்பாகவே செய்யப்பட்டுள்ளது. மேலும் கமல் தன்னை வயதானவராகவும், இளமையாகவும் காட்டுவதற்காக மணிக்கணக்கில் மேக்கப் போடுகிறார். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3 மணி நேரம் மேக்கப்பிற்காக செலவிடப்படுவதாக படக்குழுவினர் கூறுகின்றனர். மேலும் சேனாதிபதியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Latest Slideshows