Kamala Theater Owner Meet Vijay: விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர்

கமலா தியேட்டர் உரிமையாளர் விஷ்ணு கமல் நடிகர் விஜய்யை GOAT பட சூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை பெற்றது. தற்போது, கடந்த 20ம் தேதி தமிழகம் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த படம் ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் ரசிகர்கள் படத்தை ரசித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் இப்படம் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் இந்த வசூல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து மாஸ் வெற்றியை கொடுத்து வரும் நிலையில், தற்போது அந்த வரிசையில் அவரது ரீ-ரிலீஸ் படமான கில்லியும் சேர்ந்துள்ளது. விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் தரணி இயக்கிய இந்தப் படம் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியான சூழலில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்படம் வெற்றிப் படமாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய்யை சந்தித்த கமலா திரையரங்க உரிமையாளர் (Kamala Theater Owner Meet Vijay)

இந்தப் படத்துடன் தியேட்டர்களில் வெளியான விஜய் ஆண்டனியின் ரோமியோ மற்றும் விஷாலின் ரத்தினம் ஆகிய படங்களை முறியடித்து கில்லி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் வெளியான அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து நடிகர் விஜய்யை சந்தித்து வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கோட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய்யை கமலா தியேட்டர் உரிமையாளர் விஷ்ணு கமல் சந்தித்து வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தார். அவருக்கு நடிகர் விஜய் சால்வை அணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கில்லி திரைப்படப் பாடல்களை ஒன்ஸ்மோர் திரையரங்குகளில் ஒளிபரப்பியதற்காக விஷ்ணு கமலுக்கு விஜய் நன்றி தெரிவித்தார். இவர்களது சந்திப்பு மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Latest Slideshows

Leave a Reply