Kane Williamson Comeback : காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் போட்டியிலேயே பெரிய சம்பவம்

சர்வதேச கிரிக்கெட்டில் 7 மாதங்களாக விளையாடாமல் இருக்கும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதல் போட்டியிலேயே அதிரடியாக அரைசதம் அடித்து (Kane Williamson Comeback) அசத்தியுள்ளார். உலக கோப்பை தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடுகிறது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடினார். சென்னைக்கு எதிரான ஐபிஎல் முதல் போட்டியில் பீல்டிங் செய்யும் போது வில்லியம்சன் காயமடைந்தார்.

Kane Williamson Comeback :

அதன்பிறகு, கேன் வில்லியம்சன் ஊன்றுகோலின் உதவியுடன் நடந்து செல்லும் காட்சிகள் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. காயத்தில் இருந்து வில்லியம்சன் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் கேன் வில்லியம்சன் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து பல மாதங்கள் விளையாடாமல் இருந்தார். உலகக் கோப்பை தொடரிலேயே விளையாடுவது சந்தேகம் என்று கருதப்பட்டாலும் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்த போதிலும், அவர் முழு உடற்தகுதி அடையும் வரை உலக கோப்பையின் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதனால் வில்லியம்சனின் வருகையை இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் களம் (Kane Williamson Comeback) இறங்கினார். நன்றாக ஓடி பீல்டிங் செய்ய முடியுமா என வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ​​எல்லைக்கு ஓடி ரன்களை கட்டுப்படுத்தினார். இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 12 ரன்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதையடுத்து வந்த வில்லியம்சன் சேப்பாக்கத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று வங்கதேச வீரர்களுக்கு பாடம் புகட்டுவது போல் விளையாடினார்.

Kane Williamson Comeback : நிதானமாக பேட் செய்த வில்லியம்சன் 81 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்பிறகு சில பவுண்டரிகள் அடித்து நியூசிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் இறங்கிய வில்லியம்சன் முதல் போட்டியிலேயே தனது உன்னதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply