Kane Williamson Record In Test : டெஸ்ட் போட்டிகளில் யாரும் செய்யாத சாதனை

வெலிங்டன் :

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். உலகின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான கேன் வில்லியம்சன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். இது அவரது 32வது டெஸ்ட் சதம். இந்த டெஸ்ட் தொடரில் கேன் வில்லியம்சன் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசினார். இப்போது இரண்டாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்துள்ளார். இதனால் டெஸ்ட் சரித்திரத்தில் குறைந்த போட்டிகளில் 32 சதங்கள் அடித்த வீரர் (Kane Williamson Record In Test) என்ற பெருமையை பெற்றார் வில்லியம்சன்.

Kane Williamson Record In Test :

ஸ்டீவ் ஸ்மித்தின் முந்தைய சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் (Kane Williamson Record In Test) கேன் வில்லியம்சன். 172 இன்னிங்ஸ்களில் 32 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 174 இன்னிங்ஸ்களில் 32 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். அந்த சாதனையை கேன் வில்லியம்சன் (Kane Williamson Record In Test) முறியடித்துள்ளார். கடைசியாக விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்கள் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறைந்த இன்னிங்சில் 32 டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர்கள்,

  1. கேன் வில்லியம்சன் – 172 இன்னிங்ஸ்
  2. ஸ்டீவ் ஸ்மித் – 174 இன்னிங்ஸ்
  3. ரிக்கி பாண்டிங் – 176 இன்னிங்ஸ்
  4. சச்சின் டெண்டுல்கர் – 179 இன்னிங்ஸ்
  5. யூனிஸ் கான் – 183 இன்னிங்ஸ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 242 ரன்களும், நியூசிலாந்து 211 ரன்களும் எடுத்தன. முதல் இன்னிங்சில் சிறிய முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்கா, இரண்டாவது இன்னிங்சில் 235 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேன் வில்லியம்சன் சதம் அடிக்க நியூசிலாந்து அணி 267 ரன்கள் இலக்கை எளிதாக எட்டியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் சாம்பியன் ஆன நியூசிலாந்து அணி இந்த வருடமும் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியால் பிடிக்க முடியாத தூரத்துக்கு நியூசிலாந்து அணி சென்றுள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் நேரடியாக மோதுகின்றன. விளையாடிய ஒட்டுமொத்த போட்டிகளின் வெற்றி மற்றும் தோல்விகளின் சதவீதத்தின் அடிப்படையில் அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Latest Slideshows

Leave a Reply