Kanguva Box Office Collection : கங்குவா திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்

ஞானவேல்ராஜா மிகுந்த மகிழ்ச்சியில் கங்குவா படத்தின் போஸ்டரை மெகா பிளாக்பஸ்டர் என வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். விமர்சனங்களை பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது 3 நாட்களில் அதிகாரப்பூர்வமாக செய்துள்ள வசூல் அறிவிப்பை (Kanguva Box Office Collection) வெளியிட்டுள்ளார்.

Kanguva Box Office Collection

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை 350 கோடி பட்ஜெட்டில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக அனிமல் படத்தில் நடித்த பாபி தியோல் நடித்துள்ளார். படம் வெளியான நாளில் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிறு அன்று படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படம் ஹவுஸ்புல் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வசூல் (Kanguva Box Office Collection) நிலவரம் வெளியாகியுள்ளது. தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தனது எக்ஸ் பக்கத்தில் 3 நாட்களில் ரூ.127 கோடியே 64 லட்சங்களை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது.

முதல் நாளில் படம் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யாவிட்டாலும் வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்களில் வசூலை அள்ளியது. கங்குவா ரூ.1000 கோடி வரை வசூல் செய்யும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ள நிலையில், கலவையான விமர்சனங்களால் படத்தின் வசூல் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹவுஸ்புல் காட்சிகளாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு கங்குவா படம் தியேட்டர்களில் ஓடினால் மட்டுமே பட்ஜெட்டை விட படம் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியது போல படத்தின் ஓடிடி விற்பனை மற்றும் சாட்டிலைட் உரிமையை சேர்த்தாலும் 1000 கோடி வசூல் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று கங்குவா படம் உலகளவில் ரூ.23 கோடி (Kanguva Box Office Collection) வசூலித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply