Kanguva Glimpse Review : வீர, சூரனாக மிரட்டும் சூர்யா...

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நேற்று தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். மற்றொரு பக்கம் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் செம்ம மாஸாக வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா ஆகும். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வரும் இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகி வருகிறது. மேலும் கங்குவா படத்தை பத்து மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படம் சூர்யாவின் வாழ்க்கையிலேயே தரமான சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை நிரூபிக்கும் விதமாக ஏற்கனவே அறிவித்தபடி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யாவின் பிறந்தநாளான நேற்று (23-07-2023) நள்ளிரவு 12.01 மணிக்கு க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக கங்குவா படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியாகியிருந்தன. போஸ்டரில் மிரட்டிய சூர்யா, இப்போது கங்குவா க்ளிம்ப்ஸில் மரண மாஸ் காட்டியுள்ளார். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்த வீடியோவில் ஆக்க்ஷனில் மிரட்டியுள்ளார். இதில் முக்கியமாக சூர்யாவின் லுக், அசுரத்தனமான நடிப்பு, பிஜிஎம் மற்றும் கிராபிக்ஸ் என அனைத்தும் அடித்து துவம்சம் செய்கிறது. தமிழில் இதுவரை இப்படியொரு படம் வந்ததில்லை என சொல்ல வைக்கும் அளவிற்கு கங்குவா க்ளிம்ப்ஸ் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

2.21 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து சூர்யா ரசிகர்கள் வெறித்தனமாக ஃபயர் ஆக இருக்கிறது என்று கூறி வருகின்றனர். க்ளிம்ப்ஸே இப்படி என்றால் மொத்த படமும் வேற லெவலில் இருக்கும் என்று தெரிவித்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கங்குவா திரைப்படம் திரைக்கும் வரும் எனவும் படக்குழு தெரிவிதித்துள்ளது. கடந்தாண்டு கோவாவில் தொடங்கிய படப்பிடிப்பு இன்னும் முடியாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுத்தை சிவா இந்த படத்தை வேற லெவல் ஆக இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, நட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply