Kanguva Glimpse Video: கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு

கங்குவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவானது வெளியாக உள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவின் 42 வது படத்தை இயக்கி வருகிறார். இதற்கு கங்குவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இந்த கங்குவா படத்தில் தான் இருவரும் முதல் முதலாக இணைந்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி படத்திற்கு கங்குவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்து இருந்தது. இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு எண்ணூர் துறைமுகம், கேரளா, கொடைக்கானல், பிஜூ தீவுகள், கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இத்திரைப்படத்தில் சூரியா இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கங்குவா படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 23 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு Glimpse வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் சிறுத்தை சிவா கங்குவன் ஒரு மொழி ஆகும். படத்தின் போஸ்டரில் கங்குவன் என்ற பெயருக்கு மேலே உள்ள எழுத்தானது வட்டெழுத்து என்று அழைக்கப்படும் பழங்காலத் தமிழ் ஆகும். 3ம் நூற்றாண்டுக்குப் பிறகு பயன்பாட்டில் இருந்தது. கங்கு என்றால் நெருப்பு என்று பொருள். கக்குவான் என்றால் நெருப்பு சக்தி கொண்ட மனிதன் என்று பொருள் ஆகும் என்று கூறினார்.

Latest Slideshows

Leave a Reply