Kanguva New Poster : சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. கண்டிப்பாக இந்த மெகா ஹிட் படம் சிவாவுக்கு பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சூர்யாவின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை (Kanguva New Poster) வெளியிட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. ஆனால் அந்த படம் அவருக்கு சரியாக அமையவில்லை. இதைத்தொடர்ந்து, தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் ராஜா தயாரிப்பில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சூர்யாவின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். மேலும் சூர்யாவை வைத்து சிவா ஒரு சம்பவத்தை உருவாக்குவாரா அல்லது சரித்திரம் படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கங்குவா இதுவரை 400 கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவின் கேரியரில் இதுவும் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குவா முழுக்க முழுக்க பீரியட் படமாக உருவாகும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையல்ல. கங்குவா சில பகுதி மட்டுமே பீரியட் படமாக உருவாகியுள்ளது. மற்றபடி நிகழ்காலத்தில் நடப்பதாக திரைக்கதை அமைத்துள்ளார் சிவா. மேலும் அந்த காலகட்ட பகுதி 3டியில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முக்கியமாக சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் கடும் ட்ரோல்களை சந்தித்தது. எனவே இந்த படத்தின் மூலம் பதிலடி கொடுக்க சிவா கடுமையாக உழைத்து வருவதாக படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களின் படப்பிடிப்பை சிவா முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கண்டிப்பாக முதல் பாகம் மெகா ஹிட்டாகும். எனவே அதன் பிறகு இரண்டாம் பாகத்தை வெளியிட்டால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kanguva New Poster :

இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் புதிய போஸ்டர் (Kanguva New Poster) ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் இரண்டு சூர்யாக்கள், ஒரு சூர்யா பீரியட் காலத்தில் இருப்பது போன்று கையில் கத்தியுடனும், மற்றொரு சூர்யா தற்காலத்திற்கு ஏற்ப மார்டன் உடையில் கையில் துப்பாக்கியுடன் உள்ளார். இந்த போஸ்டர் (Kanguva New Poster) நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் கதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இந்த போஸ்டர் எகிற வைத்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply