Kanguva Release Date : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள சூர்யாவின் கங்குவா திரைப்படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் அக்டோபர் 10ல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதே தேதியில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படமும் வெளியாவதால் கங்குவா ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படக்குழுவினர் கங்குவா படத்திற்கு கொடுத்த பில்டப்புக்கு அந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஏன் தள்ளி வைக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை (Kanguva Release Date) படக்குழு அறிவித்துள்ளது.

கங்குவா :

இப்படத்தை இயக்குநர் சிவா கதை எழுதி இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாந்த் இசையமைத்துள்ளார். கங்குவா கடந்த பொங்கலிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் சூர்யாவுக்கு சிறு காயம் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க முடியவில்லை. இதனால் படம் எப்பொழுது வெளியாகும் என்று அனைவரையும் கேள்வி கேட்க செய்தது. சி.ஜி பணிகளை பார்த்த சிலர், ஹாலிவுட் படங்களைப் போலவே படத்தின் சி.ஜி வேலை உள்ளதாக கூறுகின்றனர்.  அதனால் படம் எப்போது வெளியானாலும் செலவு செய்யப்பட்ட பணத்தை விட பலமடங்கு வசூல் செய்யும் என்றார்கள்.

அதேபோல் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி வேட்டையன் ரிலீஸ் காரணமாக தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. இதனால் கங்குவா படம் 2024 இல் வெளியாகுமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் இந்த ஆண்டு கட்டாயம் வெளியாகும் என தெரிவித்தார். படம் தனியாக வெளியானால் தான் செலவு செய்த பணத்தை எடுக்க முடியும் என படக்குழு நம்பியதால் தான், அக்டோபர் 10 ஆம் தேதியை வேட்டையன் படத்திற்கு கொடுத்துவிட்டு, ரேஸில் இருந்து வெளியேறியது.

Kanguva Release Date :

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் (Kanguva Release Date) என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் இன்னும் இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ளது. ஆனால், நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினம் என்பதாலும், அந்த தேதியில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததாலும், தமிழில் தனி ஒருவனாக ரிலீஸுக்கு ஏற்றதாக இருக்கும் என்று படக்குழு முடிவு செய்து இந்தத் தேதியை உறுதி செய்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply