Kanguva Review : கங்குவா படத்தின் திரை விமர்சனம்

நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் திரை விமர்சனத்தை (Kanguva Review) தற்போது காணலாம்.

கங்குவா திரை விமர்சனம் (Kanguva Review)

ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள படம் கங்குவா ஆகும். இப்படத்தில் சூர்யா, பாபி தியோஸ், கருணாஸ், யோகி பாபு, போஸ் வெங்கட், நட்டி நடராஜ், ரெடின் கிங்ஸ்லி இரண்டாவது பாகத்துக்கு லீடு கொடுக்கும் கார்த்தி என ஒட்டுமொத்த பேக்கேஜாக கங்குவா (Kanguva Review) வெளியாகியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் யோலா பாடலும், ஆதி நெருப்பே பாடலும் ரசிகர்களை தியேட்டரில் உற்சாகப்படுத்தி வருவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில் பீரியட் போர்ஷனில் கங்குவாவாகவும், தற்போது ஃபிரான்சிஸ் ஸ்டைலிஷ் லுக்கிலும் மாஸ் காட்டியிருக்கிறார் சூர்யா.

கங்குவா படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது உறுதி. முதல் பாதி, இரண்டாம் பாதி இரண்டுமே சூப்பர். சூர்யா தனது மிரட்டலான நடிப்பால் (Kanguva Review) பெரிய ஸ்கோர் செய்கிறார். சில குறைகள் சில இடங்களில் மட்டுமே தெரியும். இருப்பினும் படத்திற்காக உழைத்த VFX குழுவை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் என்று ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனம் தெரிவித்துள்ளனர். கங்குவாவின் முதல் பாதி கண்ணியமாக செல்கிறது. நடிப்பின் நாயகனான சூர்யா முழுப் படத்தையும் தன் தோளில் சுமந்து தனி மனிதனாக இருக்கிறார். சிறுத்தை சிவாவின் கதை மற்றும் திரைக்கதையில் உள்ள சில குறைகள் படத்தை சில இடங்களில் தொய்வடைய வைத்துள்ளது. படத்தின் பின்னணி இசையை அதன் பலம் என்று குறிப்பிட்டு கங்குவாவுக்கு கலவையான விமர்சனங்களை வழங்குகின்றனர்.

காடு, மலை, கடல், போர்க் காட்சிகள் என அத்தனை மகத்துவங்களையும் ஒளிப்பதிவு அழகாகக் காட்டுகிறது. டிஎஸ்பி பில்டப் நல்லா ஒர்கவுட் ஆகியிருக்கு. சிறுத்தை சிவா தன்னால் முடிந்ததை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த அருமையான படைப்பு (Kanguva Review) தமிழ் சினிமாவிற்கு பெருமைனு சொல்லலாம். அத்தகைய முயற்சிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள் என ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply