Kanguva Teaser Update : கங்குவா படத்தின் டீசர் அப்டேட் - ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா ஆகும். இந்த படத்தின் டீசர் (Kanguva Teaser Update) குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். நடிகை திஷா பதானி இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், ஹிந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

கங்குவா ஒரு வரலாற்று கற்பனை படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக சூர்யா நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார். கங்குவா படம் 3D தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என மொத்தம் 10 மொழிகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன்பிறகு படத்தைப் பற்றிய அப்டேட்களை வெளியிடாமல் படக்குழு தாமதப்படுத்தி வந்தது. இதனால் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைதளங்கள் மூலம் கங்குவா அப்டேட்களை கேட்டனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது ஒரு சர்ப்ரைஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி கங்குவா படத்தின் டீசர் வெளியீடு (Kanguva Teaser Update) குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கங்குவா படத்தின் டீசர் மார்ச் 19ம் தேதி மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். டீசரில் கங்குவா வெளியீடு குறித்த அப்டேட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply