Kanguva Trailer : சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா (Kanguva Trailer) படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

கங்குவா ட்ரெய்லர் ரிலீஸ் (Kanguva Trailer)

கங்குவா படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இப்படம், நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தில் இருந்து மற்றொரு ட்ரெய்லர் (Kanguva Trailer) வெளியாகியுள்ளது. 1.30 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் வரக்கூடிய காட்சிகள் அனைத்தும் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கடந்து செல்கிறது. இந்த ட்ரெய்லரில் துரோகம், மீட்சி மற்றும் கௌரவம் ஆகிய வசனங்கள் இடம்பெற்றுள்ளன. மேக்கிங்கில் சிவா மற்றும் படக்குழுவினர் பட்டையை கிளப்பியுள்ளனர். திரையரங்குகளில் இப்படம் எந்த மாதிரியான வரவேற்பை பெரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கங்குவா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா, இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வரலாற்று பின்னணியில் பிரமாண்ட படைப்பாக உருவாகியுள்ள படம் கங்குவா ஆகும். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். மேலும் சூர்யா 10 விதமான கெட்டப் படங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் மிக முக்கியமான பான்-இந்தியா படமாகும்.

தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் இந்தி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கங்குவா படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ட்ரெய்லரில் (Kanguva Trailer) சூர்யா முதலையுடன் சண்டையிடும் காட்சி இடம்பெற்றது. இந்த காட்சியில் வி.எஃப்.எக்ஸ் செய்த விதத்தை அனைவரும் பாராட்டினர். இந்த ஒரு காட்சிக்காக மட்டும் படக்குழு ஒரு கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரே ஒரு ட்ரெய்லரில் ரசிகர்களை மிரளவைத்தது. 

Latest Slideshows

Leave a Reply