Kantara 2 : "காந்தாரா" இரண்டாம் பாகத்தின் படத்தின் தலைப்பு வெளியீடு

காந்தாரா திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான (Kantara 2) தலைப்பை அறிவித்துள்ள படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. காந்தாரா படத்தின் அடுத்த பாகத்திற்கு (Kantara 2) காந்தாரா – சாப்டர் 1 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

காந்தாரா :

கடந்த வருடம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூலிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் இந்தியாவின் தென் கடலோரப் பகுதியில் இருந்து ஒரு தெய்வீக மற்றும் ஆத்மார்த்தமான கதையைக் கொண்டு வந்து பலரின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, படத்தின் கதைக்களத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை வைத்து படம் எடுக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் காந்தாரா இரண்டாம் பாகம் (Kantara 2) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. தெய்வீக கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kantara 2 - காந்தாரா திரைப்பட அப்டேட் :

இது குறித்து, படத்தின் தயாரிப்பாளர் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கடந்த காலத்தின் புனிதமான எதிரொலிகளுக்குள் நுழையுங்கள், அங்கு ஒவ்வொரு இடத்திலும் தெய்வீகம் பின்னனி இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாததைக் காண மயங்கி இருங்கள். இது ஒளி அல்ல, தரிசனம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இடம்பெற்றுள்ள போஸ்டரில், “காந்தாரா A LEGEND CHAPTER” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Kantara 2) வரும் 27ம் தேதி மதியம் 12.25 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தையும் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்குவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ‘காந்தாரா சாப்டர் 1′ படத்தின் படப்பிடிப்பு வரும் 27ம் தேதி தொடங்குகிறது. அதையடுத்து, டிசம்பர் மாதம் முதல் தீவிர படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply