Kapil Dev Slams Indian Players: இந்திய அணி வீரர்களுக்கு ஈகோ வந்துவிட்டது...

Kapil Dev Slams Indian Players :

இந்திய வீரர்களிடம் அளவுக்கு அதிகமாக பணம் சேர்ந்து விட்டது. இதனால் திமிரும் அதிகரித்துவிட்டதாக கபில்தேவ் விமர்சித்துள்ளார். இந்த விமர்சனத்திற்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா பதில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி ஐசிசி போட்டிகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள இந்த உலகக் கோப்பையை வென்று ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்துவிட்டது.  இந்த நிலையில் முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் தொடர் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் தற்போது ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வென்று இருந்தாலும் இரண்டாவது போட்டியில் படுதோல்வி அடைந்தது. உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கு கூட இடம்பெறாத அணியிடம் இந்திய அணி தோற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலரும் விளையாடவில்லை. பும்ரா, ஐயர், ராகுல் போன்ற வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் இருப்பது பின்னடைவாகும். இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாட்டை குறித்து மோசமாக விமர்சித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ்.

ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடி இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் அதிகமாக சம்பாதித்து விட்டனர். பணம் சம்பாதித்ததுனால் கூடவே ஈகோ மற்றும் திமிரும் அதிகமாகிவிட்டது. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். சிறிதளவு காயம் ஏற்பட்டால் கூட இந்திய அணியில் விளையாடுவதில்லை‌. ஆனால் ஐபிஎல் போட்டி விளையாடும் போது காயம் இருந்தாலும் களமிறங்குகின்றனர். இந்த முக்கியத்துவத்தை இந்திய அணிக்கும் வழங்க வேண்டும். முன்னாள் வீரர் கவாஸ்கர் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்துள்ளார் இவ்வாறு கபில்தேவ் கூறியிருந்தார்.

ஜடேஜாவின் பதிலடி :

இந்த விமர்சனத்தை குறித்து  ஜடேஜாவிடம் கேள்வி எழுப்பிய போது இது குறித்து நான் எந்த சோசியல் மீடியாவும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு வீரருக்கும் தங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கு உரிமை உண்டு. ஆனால் அவர் கூறியது போல இந்திய அணியில் யாருக்கும் ஆணவம் கிடையாது. நாங்கள் அனைவரும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறோம். களத்திலும் சிறப்பாக செயல்பட்டு உள்ளோம். இதனால் இது போன்ற கருத்துக்களை நாங்கள் கண்டு கொள்வதில்லை. இந்திய அணி வீரர்கள் அனைவரும் நாட்டுக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் ஒரே குறிக்கோள் ஆகும். இவ்வாறு கூறிய ஜடேஜாவின் கருத்துக்களும் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன.

Latest Slideshows

Leave a Reply