Karthi 27: கார்த்தியுடன் இணையும் சூப்பர் ஹிட் இயக்குனர்...

Karthi 27 :

’96’ பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்கும் கார்த்தி நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல மாதங்களாகவே இந்த படத்தை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ’96’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் பிரேம்குமார். இதில் விஜய் சேதுபதி – த்ரிஷா கூட்டணியில் 2018 ஆம் ஆண்டு வெளியான ’96’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பலரின் பள்ளி வாழ்க்கையை நினைவுபடுத்தியது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். ரூ.18 கோடியில் உருவானதாக கூறப்படும் இப்படம் ரூ.50 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தை இன்று வரை பலரும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, இயக்குனர் பிரேம்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கும் கோவிந்த் வசந்தா தான் இசையமைக்கிறார்.

இந்தத் தகவலை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பி.சி.ஸ்ரீராம் கடைசியாக நாக சைதன்யா நடிப்பில் வெளியான ‘தேங்க்யூ’ என்ற தெலுங்குப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குடும்பம் சம்பந்தப்பட்ட காதல் படம் என்று கூறப்படுகிறது, விரைவில் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply