Karthi 27th Movie : ஜப்பான் விமர்சனங்களை தாண்டி களமிறங்கும் கார்த்தி

நடிகர் கார்த்தி நடித்துள்ள தீரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. ஜப்பான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது அடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார் நடிகர் கார்த்தி.

Karthi 27th Movie :

Karthi 27th Movie : காதலும் கடந்து போகும், சூது கவ்வும் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி தற்போது கார்த்தியின் 26வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு வெளியாகும் படங்களில் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பது திரைப்பட ஆர்வலர்களின் கணிப்பாக இருக்கிறது. இதையடுத்து 96 படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளார். கார்த்தியின் 27வது (Karthi 27th Movie ) படமாக உருவாகும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் கார்த்தியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிக்க, மற்ற நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாக இருக்கின்றன. இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும், 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் (Karthi 27th Movie ) வெளியாகியுள்ளது.

தீரன் அதிகாரம் இரண்டு :

இந்த படங்களை தவிர, கார்த்தி தீரன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த நவம்பர் 17ஆம் தேதியுடன் 6 வருடங்களை நிறைவு செய்த தீரன் படத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்தனர். இந்நிலையில் தீரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. தீரன் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குனர் எச்.வினோத் கார்த்தியிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசனின் படங்களின் வேலைகள் முடிந்த கையோடு தீரன் 2 படத்தின் முழு திரைக்கதையையும் எழுதவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply