Karthi Spoke At The Press Conference : மெட்ராஸ் எனக்கு ஜாதி படமாக தெரியவில்லை

Karthi Spoke At The Press Conference :

நடிகர் கார்த்தி, தான் வளர்ந்தது மெட்ராஸில் வளர்ந்தவன் எனக்கு ஜாதியெல்லாம் தெரியாது என்று ஜப்பான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் (Karthi Spoke At The Press Conference) தெரிவித்தார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வெளியாகவுள்ள திரைப்படம் ஜப்பான் ஆகும். இதில் நாயகியாக துப்பறிவாளன், நம்மவீடு பிள்ளை ஆகிய படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். கார்த்தியின் 25வது படமான இந்த படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு (Karthi Spoke At The Press Conference) சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் கார்த்தி “ராஜுமுருகன் சாருடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையில்தான் முதலில் கதை கேட்டேன். இப்படத்தில் அவருடைய நகைச்சுவை பக்கம் கச்சிதமாக இருக்கிறது. அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய ‘குக்கூ’ படமும் எனக்குப் பிடித்திருந்தது. இது போன்ற நல்ல எழுத்தாளர்கள் சினிமாவில் படம் பண்ண வேண்டும். எனக்கு கதை எழுதுங்கள் என்று இதுவரை யாரிடமும் கேட்டதில்லை. ஆனால் அவரிடம் சென்று கதையை எனக்கு உரிமையாக எழுதச் சொன்னேன். அவருடன் பணிபுரிந்த அனுபவம் அருமை. நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். ஒரே மாதிரியான படங்களை எடுப்பது சலிப்பாக இருக்கிறது. அதனால்தான் பல்வேறு வகை படங்களில் நடித்து வருகிறேன். என் படங்கள் பிடிக்குமா என்று ரிக்ஷாக்காரரிடம் கேட்டபோது, ​​”எனக்கு என்ன பிடிக்குனு நெனச்சு நீ படம் எடுக்காத, உனக்கு என்ன புடிச்சிருக்கோ அதைப் பண்ணு. அது எனக்கு பிடிக்கும்” என்றார். அதைத்தான் நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன். அதைத்தான் இன்றும் பின்பற்றுகிறேன்.

Karthi Spoke At The Press Conference : ‘மெட்ராஸ்’ படத்தின் அரசியல் குறித்து பேசிய கார்த்தி, “நான் மெட்ராஸில் வளர்ந்தேன், எனக்கு ஜாதியெல்லாம் தெரியாது, நான் அப்படித்தான் வளர்ந்தேன், மெட்ராஸில் வளர்ந்தவர்களுக்கு ஜாதி தெரியாது. நாங்கள் யாரோடு பேசினாலும் அவர்களுடைய கேட்போம் அவ்வளவுதான், அதைத்தாண்டி சாதி பற்றியெல்லாம் பேசிக்கொள்ளமாட்டோம். ‘மெட்ராஸ்’ படத்தில் நான் நடித்ததற்குக் காரணம், ஒரு சுவரை வைத்து பேசப்பட்ட அரசியலும், அதன் அடிப்படையில் உருவான கதையும் எனக்குப் பிடித்திருந்ததால்தான் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்தேன். ‘மெட்ராஸ்’ எனக்கு சாதிப் படமாகத் தெரியவில்லை. சூர்யாவின் ரோலக்ஸ் பற்றி பேசுகையில், “கமலுக்காக தான் சூர்யா ரோலக்ஸ் வேடத்தில் நடித்தார். அதுமட்டுமின்றி அவர் புதிய பரிமாணத்தில் நடிக்க விரும்பினார்” என்று பத்திரிகையாளர் சந்திப்பில் (Karthi Spoke At The Press Conference) கார்த்தி பேசியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply