Karthi Update On Kaithi 2 : கைதி 2 படத்தின் அப்டேட் கொடுத்த கார்த்திக்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்கள் ரசிகர்களாக மட்டும் இல்லாமல் சாமானிய மக்களுக்கும் பல நல்ல விஷயங்களை செய்கிறார்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கார்த்தி பார்ட்டி வைத்து கைதி 2 படம் குறித்த அப்டேட்டை (Karthi Update On Kaithi 2) கூறி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

விருந்து விழா :

நடிகர் கார்த்தியின் 47 வது பிறந்தநாள் மே மாதம் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்து ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்தனர். அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், ரசிகர்களை நேரில் அழைத்து சான்றிதழ் கொடுத்து, விருந்து கொடுத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில் பேசிய கார்த்தி, ரசிகர் மன்றங்கள் வெறும் மன்றமாக மட்டும் இருக்கக்கூடாது. நீங்கள் இப்போது செய்வது போல் மக்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டும். அதற்கு நான் எப்பொழுதும் உங்களுடன் துணையாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Karthi Update On Kaithi 2 :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 2019 திரைப்படம் கைதி. இப்படத்தில் கைதியாக நடித்து அசத்தினார். மேலும் நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்தது. தெலுங்கு, மலையாளம் என இரு மொழிகளிலும் டப் செய்யப்பட்ட நிலையில், மற்ற மொழிகளில் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது கைதி 2 குறித்த அப்டேட்டை (Karthi Update On Kaithi 2) கொடுத்துள்ளார் கார்த்தி.

இந்நிகழ்ச்சியில், தொடர்ந்து பேசிய அவர், இரண்டு படங்கள் முடிந்துவிட்டன. இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகும். அது மட்டுமில்லாமல் சர்தார் 2 ஆரம்பிக்க போகிறோம். திரும்பவும் பக்கெட் பக்கெட் ஆக பிரியாணி சாப்பிடும் நேரம் வந்துவிட்டது, லோகேஷ் கனகராஜ் அடுத்த வருடம் வர சொல்லி இருக்கிறார் என்றார். இது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் கைதி இரண்டாம் பாகத்தின் சூட்டிங் அப்டேட்டாக இருக்கும் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply