Kashmir Leo Shoot Wrap: காஷ்மீரில் "லியோ" படப்பிடிப்பு நிறைவு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முடிவடைந்த (Kashmir Leo Shoot Wrap) நிலையில், படக்குழுவினர் இன்று சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசைமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் நடந்து வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் சஞ்சய் தத்தின் காட்சிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழு திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ‘லியோ’ படக்குழு இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 10 முதல்15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், அதன் பிறகு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க படக்குழு ஹைதராபாத் செல்லவுள்ளதாகவும் தகவல் படக்குழு தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக படபிடிப்பு மே மாதம் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்த நிலையில் லியோவின் குழுவினருக்கு வாழ்த்து செலுத்தும் வகையில் ஒரு சிறப்பு ‘BTS’ வீடியோவை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் 5 முதல் 6 டிகிரி செல்சியஸில் திரைக்குப் பின்னால் பணியாற்றிய லியோவின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் காஷ்மீரின் BTS வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பனியில் படப்பிடிப்பில் நடிகர்கள் பேசுவதை வீடியோ காட்டுகிறது, மேலும் படக்குழுவினர் அங்கு பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளனர். அவர்கள் எப்படி சமைத்தார்கள், சாப்பிட்டார்கள் மற்றும் பலவற்றைக் காட்டினார். காஷ்மீர் ஷெட்யூல் முடிந்ததற்காக படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் இயக்குனர் நன்றி தெரிவித்தார். மேலும் இந்த விடியோவின் இறுதியில் நடிகர் விஜய் ஓடி வந்து ஒருவரை அடிப்பது போல கட்டப்பட்டுள்ளது.

‘லியோ’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வீடியோவைப் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ் “எதுவாக இருந்தாலும், மக்களை மகிழ்விக்கும் பணியில் மிகவும் கடினமாக உழைத்த “LEO” இன் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு மகத்தான மரியாதை என்று தெரிவித்துள்ளார். இந்த ‘BTS’ வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

This Post Has 2 Comments

  1. Kishore

    Cover image is awesome ❤️‍🔥🔥🔥💥Thanks for that image

    1. Platform Tamil

      Thank You So Much Your Valuable Words

Leave a Reply