Kasini Keerai Benefits In Tamil : காசினி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்க கூடியதுதான் இந்த காசினி கீரை. உருவத்தில் பார்ப்பதற்கு முள்ளங்கி இலையை போலவே இந்த காசினி கீரை இருக்கும். இந்த கீரையின் இலை பகுதி மட்டுமல்லாமல் வேர்ப்பகுதியும் மருத்துவ குணம் கொண்டவையாகும். மேலும் காசினிகளில் சீமைக் காசினி, கொம்புக் காசினி, வேர்க் காசினி என பல வகைகள் உள்ளன. இந்த காசினி கீரையை கிராமப்புறங்களில் கானாங்கோழி கீரை என பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. மேலும் மனித உடலில் உள்ள அனைத்து நோய்களையும் தீர்க்கும் அற்புத ஆற்றல் காசினிக் கீரைக்கு இருப்பதால் இதனை கடவுளின் கீரை (Kasini Keerai Benefits In Tamil) எனவும் அழைக்கிறார்கள். தற்போது இந்த பதிவில் காசினி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காசினி கீரையின் மருத்துவ நன்மைகள் (Kasini Keerai Benefits In Tamil)

கல்லீரல் நோய் குணமாகும்

சீனா நாட்டு சித்த மருத்துவர்கள் கல்லீரல் நோயை குணப்படுத்துவதற்கு இந்த காசினிக் கீரையை தான் அதிகம் பயன்படுத்தியதற்கான வரலாறுகள் சீனாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காசினி கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்களான A, B, C போன்றவை மிகுந்து காணப்படுகிறது.

சர்க்கரை நோய் குணமாகும்

காசினி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும். மேலும் இன்சுலின் சுரப்பை போதுமான அளவுக்கு சுரக்க செய்வதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த தீர்வாக இந்த காசினி கீரைகள் (Kasini Keerai Benefits In Tamil) உள்ளன. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களுக்கு இந்த காசினி கீரையின் விழுதை அரைத்து புண்களின் மீது பற்று போட்டு கட்டுவதால் புண்கள் விரைவாக குணமாகும். மேலும் காயங்களை விரைவாக ஆற்றக்கூடிய சக்தியானது இந்த காசினி கீரைக்கு உண்டு.

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும்

இந்த காசினி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தை சுத்தப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இந்த கீரையில் கால்சியம் அதிகளவில் காணப்படுவதால் பற்களை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடலில் அதிகளவில் உற்பத்தியாகும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி அதனால் ஏற்படும் வலியை போக்குகிறது. இந்த காசினி கீரையுடன் சீரகம் மற்றும் மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்து வந்தால் (Kasini Keerai Benefits In Tamil) கல்லீரல் வீக்கம் குறைவது மட்டுமல்லாமல் சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைத்து வெளியேற்றும் ஆற்றலும் இந்த காசினி கீரைக்கு உண்டு.

பெண்களுக்கு நல்லது

அதிக ரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனை இருக்கும் பெண்கள் கட்டாயமாக இந்த கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் காசினி கீரை கிடைக்கவில்லை எனில் காசினி பவுடருடன், தேன் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்கும்

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் காசினி கீரையின் (Kasini Keerai Benefits In Tamil) பொடியை இரவு தூங்குவதற்கு முன் பால் அல்லது வெந்நீர் கலந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் கெட்ட நீர் அனைத்தையும் வெளியேற்றிவிடும். அதுமட்டுமல்லாமல் இந்த கீரையில் உடல் பருமனை குறைக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply