நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடித்துள்ள ‘Kathal The Core' படத்தின் ட்ரெய்லர் வெளியானது

நடிகர் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடித்துள்ள ‘Kathal The Core’ படமானது  சமூக ஊடகங்கள் மற்றும் ட்விட்டரில் அலைகளை உருவாக்கி வருகிறது. நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு லேபிளின் கீழ் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் ஆனது தொடர்ந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் ரோர்சாச் நல்ல வெற்றியை பெற்றன. கேரளா சர்வதேச திரைப்பட விழாவில் லிஜோ ஜோஸ் பாலிசேரி இயக்கிய, Mammootty Kampany’s First Film Nanpakal Nerathu Mayakkam, சர்வதேச போட்டி பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜியோ பேபி இயக்கி மம்முட்டி  மற்றும் ஜோதிகா நடித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘Kathal The Core’ படத்தின் ட்ரெய்லர் ஆனது தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ‘Kathal The Core’ படத்தின் ‘என்னும் என் காவல்’ பாடலின் லிரிக்கல் வீடியோ ஆனது வெளியாகியுள்ளது. அன்வர் அலி எழுதிய இந்த பாடலுக்கு மேத்யூஸ் புலிக்கன் இசையமைத்துள்ளார். ஜி.வேணுகோபால் மற்றும் கே.எஸ்.சித்ரா இந்தப் பாடலை பாடியுள்ளனர். இந்த 2023ஆம்  ஆண்டு ஜியோ பேபி இயக்கத்தில், சமீபத்தில் வெளியான ‘கிறிஸ்டோபர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் மம்மோட்டியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ‘Kathal The Core’ ஒன்றாகும். The Great Indian Kitchen-ன் புகழ் ஜியோ பேபி இயக்கியுள்ள Kathal The Core படம் நவம்பர் 23 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மலையாளத்தில் நாம்லே சீதாகல்யாணம், ராக்கிளிப்பட்டு ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்த ஜோதிகா 12 ஆண்டுகளுக்குப் பிறகு  அதாவது 2009 ஆம் ஆண்டு ‘சீதா கல்யாணம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் மம்முட்டி கம்பனியின் காதல் படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு வருகிறார். மம்முட்டியின் பிரம்மாண்டமான தயாரிப்பு ஆகியவற்றைப் பாராட்டி சூர்யா ட்வீட் செய்திருந்தார். காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது 2022 அக்டோபர் 20 அன்று கொச்சியில் தொடங்கி 34  நாட்களில் முடிவடைந்தது.

'காதல் தி கோர் - Kathal The Core' படத்தின் கதை :

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அமைதியான கிராமமான டீகோயில் வசிக்கும் மேத்யூ மற்றும் ஓமனா தம்பதியினரின் கதையை வெளிப்படுத்துகிறது. சமூகத்தில் நற்பெயர் பெற்ற ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி செயலாளரான மேத்யூ தேவஸ்ஸி, தனது கட்சியின் வேண்டுகோளின் பேரில், பஞ்சாயத்து இடைத்தேர்தலில் போட்டியிட தயக்கத்துடன் அரசியலில் இறங்குகிறார் . அரசியலில் இறங்கிய  மேத்யூ தேவஸ்ஸின் கதையை இப்படம் சொல்கிறது. மேலும் அவர் தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட சூழ்நிலைகளுக்கு அளித்த பதில்களிலும் கவனம் செலுத்துகிறது. சண்டையிடும் நடுத்தர வயது தம்பதிகளான மம்முட்டி மற்றும் ஜோதிகா ஆகியோரை பின்தொடர்வது போல்  திரைக்கதை அமைந்துள்ளது. இந்த தம்பதிகளின் வீழ்ச்சி ஆனது சட்டப் போரில் முடிவடைகிறது. இது மேத்யூ தேவஸ்ஸியின் அரசியல் அபிலாஷைகளையும் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. ஒரு தீவிரமான மற்றும் உணர்ச்சிகரமான கதையாக இப்படம் அமைந்துள்ளது.

இப்படத்தில் நடிகர் மம்முட்டி அரசியல்வாதி மேத்யூ தேவஸ்ஸியாக  நடிக்கிறார். அவரது மனைவி ஓமனா மேத்யூவாக ஜோதிகா  நடிகை ஜோதிகா நடிக்கிறார், மேத்யூ மற்றும் ஓமனாவின் மகளாக ஃபெமி மேத்யூவாக அனகா மாயா ரவி  நடிக்கிறார், மேத்யூவின் மைத்துனராக ஜோஜி ஜான் மற்றும் சின்னு சாந்தினி, சின்னு சாந்தினி, சுதி கோழிக்கோடு, குட்டையாக அலெக்ஸ் அலிஸ்டர், ஜோசி சிஜோ, ஜிஸ்ஸு சென்குப்தா, முத்துமணி, அனகா அகுக், ஜோசி சிஜோ, ஆதர்ஷ் சுகுமாரன், லாலு அலெக்ஸ், சின்னு சாந்தினி நாயர் மற்றும் முத்துமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் படத்தின் திரைக்கதையை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஜக்காரியா எழுதியுள்ளனர். ஒளிப்பதிவுவை  பிரான்சிஸ் லூயிஸ் மற்றும், இசையை மேத்யூஸ் புலிகன் செய்துள்ளனர்.

நடிகர் மம்முட்டியின் மகன் நடிகர் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான வேஃபேரர் பிலிம்ஸ் இந்தப் படத்தை கேரளாவில் விநியோகம் செய்கிறது. சமீபத்திய அறிக்கையின்படி, ஜியோ பேபி இயக்கிய ‘கதல் தி கோர்’ ஆனது கோவாவில் 20/11/2023 – 28/11/2023  வரை  நடைபெறும் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

Latest Slideshows

Leave a Reply